Posts

Showing posts from November, 2020

Winged Beans சிறகு அவரை

Image
 Winged bean என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த காய்கறி தாவரம் கிழக்காசியாவில் பெரிதும் விரும்பி வளர்க்கப்படும் கொடி தாவரமாகும். இந்த தாவரத்தின் இலை அவரை போன்று இருப்பதால் இதை அவரை ரகமாக கருதி winged bean தமிழாக்கமாக சிறகு அவரை என்றும், இந்த காயிற்கு நான்கு பட்டை/பக்கங்கள் இருப்பதால் காரணப் பெயராக சதுர அவரை என்றும் குறிக்கப்படுகிறது. நாட்டு மருத்துவத்தில் செடியின் அனைத்து பாகங்களை குறிக்கும் விதமாக சமூலம் என்று வார்த்தையை பயன்படுத்துவர். இத்தாவரத்தின் அனைத்து பாகங்களும் வேரிலிருந்து செடியின் நுனி வரை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால், கீழை நாடுகளில் அதிகமாக பயிரப்படுகிறது. விதை மற்றும் கிழங்குகளைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்யலாம். கிழங்கையும் சமைக்கலாம். இது பல்லாண்டு தாவரமாகும். காய்ப்பு முடிந்ததும் கவாத்து செய்து செடியை பராமரித்து வந்தால் , உரிய நேரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அப்படியே செடி பட்டு போனாலும், மண்ணில் உள்ள கிழங்கின் மூலமாக மழை வந்ததும் துளிர்ந்து வளரும். Cool climate crop என்று குறிக்கப்படும் தாவரம் ஒரு சம்பா ரக பயிராகும். ஆடிப் பட்டத்தில் விதைத்தால்...

இலைத்தேள் கடியும் அதன் வைத்திய முறையும் the truth behind the leaf scorpion viral video

Image
ஜெனி கார்த்திக்கு  நிகழ்ந்த அனுபவம்🌿🌿 இடம்: லைபீரியா நம் குழுவிலேயே இதற்கு முன் இளைத்தேள் என ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருந்தது.. அதில் சில உண்மையும் இருக்கிறது.. கை வைத்தியம் : -------------------- நேற்று என் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டு தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் மிளகுக் கொடி, கொடி ரோஜா, பிரண்டை, சிவப்பு பசலை, தரையில் இஞ்சி என அனைத்தும் புதராக இருந்தது. திடீரென்று கையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு மற்றும் 2-3 குளவிகள்/தேனீக்கள் ஒன்றாக கொட்டியது போன்ற ஒரு வலி.  முதலில் கட்டெறும்பு கடித்து இருக்குமோ என்றுதான் எண்ணினேன் ஆனால் கையை இலைச் சருகுகளுக்கிடையே  கொண்டு சென்று எடுத்த அந்த கண்சிமிட்டும் நேரத்தில் கடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை பாம்பு எதுவும் கடித்து இருக்குமோ என பார்த்தால் கையில் பல் தடமும் இல்லை. வலி மோதிர விரல் நடுவிரல் மற்றும் கட்டை விரலில்.  சுற்றி முற்றி பார்த்தால் எந்த பூச்சியும் தென்படவில்லை. தேனீ கடந்தை குளவி என எதுவும் இல்லை. அரை மணி நேரம் கழித்தும் வலி அடங்க வில்லை. நெறிகட்டுவது போல ஒரு உணர்வ...

வெள்ள கீரை/வள்ளக்கீரை / வள்ளல் கீரை / வாட்டர் ஸ்பினச் Water Spinach Ipomoea aquatica health benefits

Image
வணக்கம்,  இந்த கீரை  யாருக்காவது கிடைத்தால் விடாதிர்கல். இந்த கீரை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உணவில் சேர்த்து வந்த ஒரு  வகை கீரை தான். இப்போது இந்த கீரையை பற்றி யாருக்கும் அந்த அளவு தெரியாத காரணத்தால். இந்த கீரையை உணவில் யாரும் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது... இந்த கீரையின் பெயர் வெள்ள கீரை/வள்ளக்கீரை அல்லது வள்ளல் கீரை இதனை ஆங்கிலத்தில் வாட்டர் ஸ்பினச் என்று அழைக்கப்படுகிறது.  இதில் அதிக அளவில் புரதம், நார்சத்து,கணிமங்கள், மற்றும் வைட்டமின்கள் ஆகியன உள்ளன. இதன் மருத்துவ குணங்கள் என்று எடுத்துக்கொண்டால் -  இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும், இது பெண்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்தும், இதன் கீரையை 1 மண்டலம் உணவில் சேர்த்து வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தலை நீக்கும் மேலும் கருப்பையை பலப்படுத்தும், மற்றும் மாதவிடாயை சரி செய்யும், இந்த கீரையை ஆண்கள் உண்டுவர ஆண்மையை அதிகரிக்கும் என சித்த மருத்துவ குணப்பாட நூல் கூறுகிறது....  இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்ட இந்த கீரையை இனி ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக் பயன்பெருவோம்.  N.Karthick-D....

விதைகள் பற்றிய ஒரு பதிவு.....

 விதைகள் பற்றிய ஒரு பதிவு..... இன்றைய சூழ்நிலையில் நாட்டுவிதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பது, விதைத்து அதிலிருந்து விதை எடுத்து, மறுவருட விதைப்புக்கும், நண்பர்களுக்கு பகிர்வதும் மிக அவசியமான ஒவ்வொரு தமிழரின் கடமையாகும், வரும் காலங்களில் நாம் விளைவிக்கும் காய்கறிகளிலிருந்து விதை எடுக்க முடியுமா என்பது கேள்வி குறியே,...... உதாரணத்திற்கு விதையில்லா பப்பாளி.....அடுத்து கிராமங்களில் முதல் வருடம் விதைத்த பாசிபயறோ, உளுந்தோ எடுத்து வைத்து மறுவருடம் விதைத்தால் வருவதில்லை, புதியதுதான் வாங்கி விதைக்கிறோம் என்று சொல்றாங்க, நிலமை இப்படி இருக்க......நம்மால் முடிந்த சில விதைகளை காக்கலாம்.....எல்லாவற்றையும் ஒருவரால் செய்யமுடியாது, உதாரணத்திற்கு ஒருவர் ஒரு தக்காளி வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.......வளர்த்து விதை எடுத்து எல்லோருக்கும் கொடுக்கலாம், தக்காளி வகையா இவரிடம் கிடைக்கும் என்பதுபோல ...... நிறைய நண்பர்கள் மாடிதோட்டம், விவசாயம் செய்றாங்க, விதைபகிர்வு என்பது குறைவு, கத்தரிக்காயோ, தக்காளியோ அறுவடை படம் போடும்போது, விதை எப்படி தேர்ந்தெடுத்தீங்க,  அறுவடை முடிந்து விதை எப்படி சேகரிச்சீங்க என்று பதிவு...

மிளகாய் ரகங்கள் Some rare varieties of chilly

Image
காரம் மிகுந்த புல்லட் மிளகாய்.   தட்டையாக படர்ந்து விரிந்து வளரும் புல்லட் மிளகாய் செடி. கிளைகள் மேல் நோக்கி வளராமல் தட்டையாக பக்கவாட்டில் பரந்து வளருவதால் அதிக பூக்கள் பூத்து காய்களும் அதிகம் கிடைக்கிறது. Flat canopy plant. நீளமான கருப்பு மிளகாய்.  நல்ல மனம் அதிக காரம் மற்றும் அதிக காய்ப்பு. இத்துடன் கருப்பு ரகங்கள் மட்டும் 12.

கத்தரி விதை எடுக்க வழிமுறை How to collect brinjal seeds for preservation

Image
 கத்தரி விதை எடுக்க விரும்பினால் மூன்றாம் அல்லது நான்காம் காய்ப்பு காய் ஒன்றை செடியிலேயே பழுக்க விட்டு அறுத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அது தானாக நொதித்து புழு வைத்த பின் எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு திரட்சியான ( தண்ணீரின் அடியில் தங்கும் கனமான)  விதைகளை மட்டும் உலர்த்தி சேகரித்து வைக்கவேண்டும்.  உபயம் : சகோதரி. பிரியா.

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள் Farming proverbs

 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்  🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝 களர் கெட பிரண்டையைப் புதை  🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  🌝 நன்னிலம் கொழுஞ்சி  🌝நடுநிலம் கரந்தை  🌝கடை நிலம் எருக்கு 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை 🌝நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு  🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்  🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை  🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் 🌝 🌝மார்கழி மழை மண்ணுக்கு உதவாது  🌝 தை மழை நெய் மழை 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை  🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி  பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்  🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். 🌝 அடர விதைத்தால் போர் உயரும் நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. அன்புடன் உங்கள் விவசாய நண்பன்

சீகைகாய் செடி வீட்டில் விதையிட்டு வளர்ந்துவிட்டது... ஆனால் 4 மாதம் ஆகியும், சிறியதாகவே உள்ளது. செடி பராமரிப்பு பற்றி கூறவும்? வெயிலில் வைக்க வேண்டுமா? நிலத்திலேயே வந்துவிட்டது.

 Ans 1:  பயிர் தொழில், விவசாயம் என்று வரும் பொழுது அது சிறந்து விளங்க அடிப்படையில் ஆதாரமாக இருப்பது மண் வளம் தான். வளம் இல்லாத மண்ணில் செடிகள் செழிப்பாக வளராது. செடி வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியம். தாவரத்தைப் பொருத்து சூரிய ஒளி தேவை முன்னும் பின்னும் இருக்கும். பொதுவாக பயிர் செய்வதானாலும் சரி செடி நடுவதாக இருந்தாலும் சரி மண்ணை வளப்படுத்திய பின் தான் செய்வார்கள். அப்படி வளப்படுத்தாத நிலையில் நீங்கள் செடிக்கு மேலுரம் கொடுத்திருந்தால் செடி வளர்ச்சி பெற்றிருக்கும்.  காய்ந்த இலைகளை கொண்டு செடியை சுற்றி மூடாக்கிட்டு மாதமிருமுறை ஜீவாமிர்தம், அமர்தகரைசல், மீன் அமிலம் இதில் ஏதேனும் ஒன்றை நீர் பாசனத்தில் கலந்து விடவும். பூச்சி விரட்டி 5-6 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும். Ans 2: எடுத்து வேற இடத்தில் நடுங்க, கொஞ்சமாவது சூரியஒளி வேண்டும்.....மரத்திற்கு கீழ் கீரைகள் பூச்செடிகள் வைங்க...

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கஸ்தூரி வெண்டை

Image
 கஸ்தூரி வெண்டை அதிக மருத்துவ குணங்கள் கொண்டது என்று கூறுகிறார்கள். இதில் இரண்டு வகை உள்ளது.  கஸ்தூரி வெண்டை கஸ்தூரி வெண்டை  கஸ்தூரி வெண்டை Kasthuri vendai plant with flower கஸ்தூரி வெண்டை செடியிலும் காய்களிலும் இது போல சுனை இருக்கும்... கஸ்தூரி வெண்டை பெரிய ரகம் நட்சத்திர பழத்தின் அமைப்பை பெற்றிருக்கும். மற்றொரு ரகம் ஒரு அங்குல நீளம் வரும். சாதாரண வெண்டையின் பிஞ்சு போல் இருக்கும். இரண்டுமே வெண்டையின் சுவையை கொண்டதாக இருக்கும். பெரிய ரகத்தில் ஒரு மென்மையான கசப்பு தன்மை இழையோடும். சிறியது அப்படியே வெண்டையின் சுவையை கொண்டிருக்கும். பசுமையாக (salad) உண்ணலாம், சமையலிலும் சேர்க்கலாம். சிறிய ரகத்தை விட பெரிய ரகத்தில் அதிக காய்ப்பு இருக்கும். சிறிய ரகத்தில் செடியிலும் காயிலும் அதிக சுனை கொண்டிருக்கும். கிளைகள் வளைந்து நெளிந்து வளரும்.