மண் வளப்படுத்தும் முறை How to enrich your soil
வணக்கம் மண் வளப்படுத்தும் முறை என் அனுபவம் புரிதல் by Mrs. Ajitha Veerapandian ...... துள்ளித்திரியும் வயதில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு கோழி நாய் பூனை இப்படி ஏதாவது ஒரு உயிர், ஏன் குருவி கூடுகள் கூட அதிகம் இருக்கும், மனிதன் மட்டுமன்றி எல்லா உயிரனங்களும் இணைந்து வாழும், ஒரு சங்கிலி தொடர்பு இருக்கும்..... காலையில் சாணி கலந்த தண்ணீர்தான் வாசல் தெளிப்பாங்க, இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, தண்ணி தெளிச்சிட்டு பெருக்கி கூடையில் அள்ளுவாங்க, ( இதில் எல்லா வீட்டு குப்பைகளும் அடங்கும் ) அப்படியே ஒரு வீட்டு ஒரு எருகிடங்கு இருக்கும் கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி அதில்தான் குப்பைகள் சேகரிக்கப்படும், காலையில் ஒரு 6 மணிக்கெல்லாம் அள்ளிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போவோம், அந்த காலை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும், தும்பைசெடியில் அதிகம் நிற்கும் அந்த குப்பை கூடையை வைச்சே பட்டாம்பூச்சி பிடிப்போம் விடுவோம் இது காலைநேர விளையாட்டு, அந்த எரு கிடங்கில் செழிபான தக்காளி செடி, கேந்திப்பூ செடி கிடைக்கும் எடுத்துவந்து வீட்டில் நடுவோம், வெள்ளரி, மிதுக்கங்காய், மஞ்சள் பூசணி எர...