Posts

Showing posts with the label யுவன்

"நண்பேன்டா" - சிறுகதை அழ.குழ.மா.அழகப்பன், சென்னை Nanbenda a short story about friendship in Tamil

Image
  " நண்பேன்டா " - சிறுகதை கதிர் , மோகன் , யுவன் , சந்திரன் , நளன் ஐவரும் நல்ல நண்பர்கள் . ஐவரும் சதுரகிரி மலையில் மலையேற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர் . மோகன் ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் அவன் தான் தலைமை தாங்கி அழைத்துச் சென்றான் . மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் நேர் வழியில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை . மோகன் மாற்றுப் பாதையில் செல்ல அனைவரையும் பணித்தான் . " மழையினால் ஆபத்து வரும்ன்னு தானே அனுமதிக்கல . அப்புறம் எதுக்குடா ரிஸ்க் " என்றான் நளன் . இயல்பாகவே நளன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன் . " அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் நேர் வழியில் மழை பெய்யுறப்போ காட்டாற்று வெள்ளம் திடிரென ஏற்பட்டு   நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் . அதற்கு தான் அனுமதிப்பதில்லை . ஆனால் நம் செல்லும் பாதையில் தண்ணீர் வராது . ஏற்கனவே மழைக்காலத்தில் இந்த பாதை வழியாக தான் செல்வோம் . டேய் பயப்படாதே, எல்லோரும் சேர்ந்தே போவோம் . மேலே ஏறி திரும்பி கீழே வர்றது வரை கண்டிப்பா நான் கூடவே வருவேன் டா ....