குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய முறைகள்
குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய முறைகள் 🌿🙏☀️🌼🌻🌸🌿 ஆண்பிள்ளைக்கு அரைஞாண்கயிறு பெண்களுக்கு கண்டாங்கிசேலை கட்ட சொன்னதன் காரணம் தெரியுங்களா??* அறிவியல் கூறும் உண்மை அரைஞாண் என்பது பெரும் பாலான நம்தமிழ் சமுதாய ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். அரைஞாண் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணி யமாகக் கருதப்படுகிறது.நமது சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவ தில்லை.பெண்குழந்தை களுக்கான அரைஞாண் தமிழ் நிலப்பகுதிகள் போக வடக்கில் சில பகுதி களிலும் இதை அணிந்து இருப்பதை பார்க்கலாம். பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டிஅணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் மற்றும் அதில் ஆரோக்யம் ஒளிந்து உள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் மருத்துவமும் ஒளிந்துள்ளது. பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல்இறக்கநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது....