நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. Peanut tincture is a yield multiplier - an overview.
ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும். பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம். பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும். நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும். திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம். 4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம். பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்...