Posts

Showing posts with the label seeds for healthy plant

உறங்கும் விதைகள் உயிர் பெறும் பயணம்!!! A Journey of sleeping seeds

உறங்கும் விதைகள் ( உறக்கத்தில் உள்ள ஒரு செடி ) உயிர் பெறும் பயணம்.....  வணக்கம்  * விளைகின்ற பயிரில் நன்கு விளைந்த பயிரில் இருந்து தேறிய விதைகளை மட்டும் எடுப்பது * அதை பானை அல்லது மண்குதிர்களில் பாதுகாத்தார்கள் * சேமிப்பின்போது பூச்சி தின்றுவிடாமல் இருக்க நொச்சி, புங்கம் போன்ற தாவரங்களின் இலைகளை விதைமீது பரப்பி வைத்தார்கள் * விதை சேமிப்பிற்கு முன்பு மூன்று அமாவாசை நாட்களில் வெயிலில் உலர்த்தி பின்பே சேமித்தார்கள் * விதைகளை உழவர்கள் கைமாற்றிக்கொண்டார்கள் * சாம்பலில் விதைகளை புரட்டி விதைநேர்த்தி செய்யப்பட்டது, எறும்பு, எலி, குருவி பொறுக்கிவிடாமல் இருப்பதற்கு * உரிய நேரம் காலம் பார்த்து விதையை நிலத்தில் இட்டு நீர்விடும் ( மழை) போது விதை உயிர்பெறுகிறது..... விதை என்பது வருங்கால சமுதாயத்தின் உயிர் வாழ்க்கையின் அடிப்படை... - Ajitha Veerapandian

விதை சேமிப்பு Seed collection and preservation

 விதை சேமிப்பு... நாம எல்லாரும் நிறைய செடி வளர்ப்போம், ஆனா அதிலிருந்து விதை எப்படி எடுக்கனு தெரியாமல் இருப்போம், அல்லது தோனாது, ஆனா இன்றைய கால சூழ்நிலைக்கு விதைகள் சேகரிப்பு மிக அவசியம், ஒவ்வொரு முறையும், விலைக்கு வாங்குவது அவசியமில்லாத ஒன்று, ஒரு செடி வளர்த்தால் அதில் காய்கள் பறிச்சு சிறிது நாள் ஆனதும் விதை எடுத்து வைப்பது அவசியம், இதில் பழங்களாக இருந்தால் நன்கு பழுக்கவைத்து விதை பிரித்து நிழலில் உலர வைத்து அதில் சாம்பல் கலந்து வைத்தால் மறுவருடம் நமக்கு பயன்படும், பூச்சிகள் விழாமல் விதையை பாதுகாக்க அமாவாசை இரவு நிலவொளியில் வைத்து பகலில் அதிக வெயில் இல்லாமல் சூரிய ஒளியில் வைப்பது நல்லது, உதாரணமா வெள்ளரி விதை சேகரிக்கும் போது நீரில் மூழ்கும் விதைகளே தேரிந்தெடுத்துவைக்கவேண்டும், மிதக்கும் விதைகள் முளைக்காது, ஒரு சில விதைகள் முற்றியவுடன் காய்கள் வெடித்து சிதறிவிடும், உதாரணமா வெண்டைக்காய், கனகாம்பரம், சங்குப்பூ, அதன் காலமறிந்து சரியான நேரத்தில் எடுத்து சேமிக்கவேண்டும், கிராமங்களில் எளிதா விதையை தேர்வு செய்து சேமிச்சிருவாங்க, ஒரு மூட்டை மொச்சைகாய்கள், தட்டைப்பயிர்கள் கொட்டிக்கிடந்தாலும்...

கத்தரி விதை எடுக்க வழிமுறை How to collect brinjal seeds for preservation

Image
 கத்தரி விதை எடுக்க விரும்பினால் மூன்றாம் அல்லது நான்காம் காய்ப்பு காய் ஒன்றை செடியிலேயே பழுக்க விட்டு அறுத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அது தானாக நொதித்து புழு வைத்த பின் எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு திரட்சியான ( தண்ணீரின் அடியில் தங்கும் கனமான)  விதைகளை மட்டும் உலர்த்தி சேகரித்து வைக்கவேண்டும்.  உபயம் : சகோதரி. பிரியா.