Posts

Showing posts with the label organic story

ஒரு குட்டி கதை... இந்த கதையின் ஒவ்வொரு வரியும் வெவ்வேரு நபர்களால் எழுதப்பட்டது...short story in which each line written by different people

 எழில் கொஞ்சும் பச்சை பசேல் மலைமீது  மெல்ல இயற்கை எழிலை ரசித்து உணர்ந்து, வியந்த கண்களோடு, சில்லென்று தொடும் தென்றலோடு,  காலணிகள் இல்லாமல் மண்வாசமும் உணர்ந்து.....ஏறுகிறேன் மலைமீது..... மலை மீது ஏறும்போது என் மனம் மற்றும் உடம்பும் காற்றில் பறந்துசென்றது, மலையின் வழி எங்கும் மூலிகை மரங்களின் காற்று  என்னை மேலும் தூய்மை ஆக்கியது. அப்போது தான் உண்மையான ஆக்ஸிஜன் உணர்ந்தேன். இயற்க்கையை ரசித்து என்னை நிலை மறந்து தேவதையாக மாறி மலைவாசிகள் வாழக்கமுறைகளை ரசித்தேன். மேகங்கள் அனைத்தும் கருமேகம் ஆக மாரி இளம் தூறல்  ஆரம்பித்து இருந்தது பஞ்ச பூதங்களின் சக்தியை உணர முடிந்தது பஞ்சபூதங்களின் சத்தி முழுமையான நான் அடைந்தேன். தூறலை கண்டதும் என் மனம் மயிலை போல ஆட நினைத்தது. அப்போது மயில் ஆட குயில்பாட ஏக ஆனந்தம் இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது. இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது. நாம் பெற்ற இன்பம் நம் தோழர்களை தேடியது. மின்னல் ஒளியில் நான் கண்ட காச்சி ஆஹா மழையில் நனைந்து அந்த வெளிச்சத்தில் வெதுவெதுப்பான இடம் செல் எண்ணியது. மலையின் மீது வானவில் நான் தொட்டுவிடும் தொலைவில் இருப்ப...