Posts

Showing posts with the label kuppaimeni

குப்பையாகிப் போன நம் உடலை பொன்னாக மாற்றும் மூலிகை Kuppaimeni ( Acalypha indica ) ...

Image
 #குப்பையாகிப்போனநம்உடலை  #பொன்னாகமாற்றும்மூலிகை... 🙏#குப்பைமேனிகீரை*🌿 Kuppaimeni ( Acalypha indica )  மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி மீது அதிகம் விருப்பம் என்பதால், இதற்கு #பூனைவணங்கி’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து. குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும். குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும். குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால்,...