மதராஸ் பாஷை சுவை தலபுராணம் - மெட்ராஸ் பாஷை Madras Tamil
மெட்ராஸ் பாஷை அல்லது மெட்ராஸ் மொழியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றது தமிழ்த் திரைப்படங்கள்தான். குறிப்பாக, என்.எஸ்.கே, சந்திரபாபு, சோ, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன், லூஸ் மோகன், ஜனகராஜ் எனக் காமெடி நடிகர்களே இதைக் கச்சிதமாகச் செய்தனர். 1968 ம் வருடம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம்’ படத்தில் மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட… நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...’ பாடல் மெட்ராஸ் பாஷையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. தவிர, பல படங்களில் நடிகர்கள் சந்திரபாபுவும், சோவும் இன்னாமே, எப்டிகீற… குந்துமே… என்பது போன்ற வசனங்களைப் பேசுவதைப் பார்த்திருப்போம். எப்படி நெல்லைக்கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும், கோவைக்கும் தனித்துவமான பேச்சு மொழி இருக்கிறதோ, அதுபோலவே மெட்ராஸுக்கும் தனித்த பேச்சு மொழி இருக்கிறது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், முஸ்லிம்கள், பணி நிமித்தமாக வந்த மற்ற மொழியினர் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வந்ததும், வாழ்ந்ததுமே இதற்குக் காரணம். குறிப்பாக, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் நிறைந்திரு...