Posts

Showing posts with the label seed collection

மாற்றத்தை நோக்கி

 திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா விதை சேகரிப்பில் முக்கிய பங்காற்றிவருகிறார். தன் கணவர் தொழில் முனைபவர்,1 மகன் , 1 மகள் இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் தன் வீட்டு தேவைக்காக வீட்டு மாடியிலும் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய இடத்திலும் தங்கள் குடும்பத்திற்கான காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தார்.                  அதில் சேகரித்த விதைகளை விதைக்க வீட்டில் உள்ள இடம் போதவில்லை.பிறகு தன் வீட்டின் அருகில் உள்ள நண்பரின் 3 ½ சென்ட் இடத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார். இந்த 3½ சென்ட் இடத்தில் குடும்பத்திற்கான உணவு தேவையை நிறைவு செய்துள்ளார்.இப்பொழுது தமிழகம் முழுக்க விதை பரவலாக்கம் செய்து கொண்டு இருக்கிறார்.  தன் வேலையையும், வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு , குழந்தைகளையும் கவனித்து கொண்டு தோட்டத்தையும்  பராமரித்து வருகிறார்.                     பெண்கள் கைகளில் தான் விதை இருக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா கூறுவதிற்கு இணங்க, இவர் விதைகளை பேராயுதமாக எடுத்துக்கொண்ட...

விதை சேமிப்பு Seed collection and preservation

 விதை சேமிப்பு... நாம எல்லாரும் நிறைய செடி வளர்ப்போம், ஆனா அதிலிருந்து விதை எப்படி எடுக்கனு தெரியாமல் இருப்போம், அல்லது தோனாது, ஆனா இன்றைய கால சூழ்நிலைக்கு விதைகள் சேகரிப்பு மிக அவசியம், ஒவ்வொரு முறையும், விலைக்கு வாங்குவது அவசியமில்லாத ஒன்று, ஒரு செடி வளர்த்தால் அதில் காய்கள் பறிச்சு சிறிது நாள் ஆனதும் விதை எடுத்து வைப்பது அவசியம், இதில் பழங்களாக இருந்தால் நன்கு பழுக்கவைத்து விதை பிரித்து நிழலில் உலர வைத்து அதில் சாம்பல் கலந்து வைத்தால் மறுவருடம் நமக்கு பயன்படும், பூச்சிகள் விழாமல் விதையை பாதுகாக்க அமாவாசை இரவு நிலவொளியில் வைத்து பகலில் அதிக வெயில் இல்லாமல் சூரிய ஒளியில் வைப்பது நல்லது, உதாரணமா வெள்ளரி விதை சேகரிக்கும் போது நீரில் மூழ்கும் விதைகளே தேரிந்தெடுத்துவைக்கவேண்டும், மிதக்கும் விதைகள் முளைக்காது, ஒரு சில விதைகள் முற்றியவுடன் காய்கள் வெடித்து சிதறிவிடும், உதாரணமா வெண்டைக்காய், கனகாம்பரம், சங்குப்பூ, அதன் காலமறிந்து சரியான நேரத்தில் எடுத்து சேமிக்கவேண்டும், கிராமங்களில் எளிதா விதையை தேர்வு செய்து சேமிச்சிருவாங்க, ஒரு மூட்டை மொச்சைகாய்கள், தட்டைப்பயிர்கள் கொட்டிக்கிடந்தாலும்...

கத்தரி விதை எடுக்க வழிமுறை How to collect brinjal seeds for preservation

Image
 கத்தரி விதை எடுக்க விரும்பினால் மூன்றாம் அல்லது நான்காம் காய்ப்பு காய் ஒன்றை செடியிலேயே பழுக்க விட்டு அறுத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அது தானாக நொதித்து புழு வைத்த பின் எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு திரட்சியான ( தண்ணீரின் அடியில் தங்கும் கனமான)  விதைகளை மட்டும் உலர்த்தி சேகரித்து வைக்கவேண்டும்.  உபயம் : சகோதரி. பிரியா.