Posts

Showing posts with the label organic gardening

உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips

 எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும்.  ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள். கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும். கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும். கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும். பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும். அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

Image
 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை * கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது.  * அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை. Mr. Balaraman Maneri Mrs.V.Priya Rajnarayanan  பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் https://youtu.be/bMtLZfTHzPc

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1 எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? கேள்வி 2 வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்?  கேள்வி  3 மண்புழு உரம் ஏன் ? Answers 1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்... மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது 1&2 , மண் புழு  3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்... * பதில் 1= மண்புழு * பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து...

ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன

 நாட்டு பசு மாடே போதும்!‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல… அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்… காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க… சடசடவென பொழிந்தார் பாலேக்கர் ”ரசாயன விவசாயம் வேண்டாம்… இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள் சிலர். ‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போடுங்கள்’, ‘பொட்டாஷ் தேவையில்லை… ஆர்கானிக் உரம் போதும்’, ‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்… பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள். ‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல… காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிட...

நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா?

 கேள்வி: வேர்கடலை கரைசல் செடிகளுக்கு நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது தக்காளி, மிளகாய் ரகங்களை நாற்று விட்டுள்ளேன். அவற்றில் சில நல்ல வளர்ச்சியும் சில வளர்ச்சி இல்லாமலும் உள்ளது. நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா? மானேரி பாலா: இந்த கேள்வியை படித்ததும் எனக்கு சில வருடங்களுக்கு முன் மக்கள் TV யில் மலரும் பூமி நிகழ்ச்சி தான் ஞாபகம் வந்தது. அதிக அளவில் நாற்றுக்கள் தயாரித்து விற்பவர் குழி தட்டிற்கான மண் தயாரிப்பை பற்றி விவரித்தார். மண் விலை அதிகம் என்பதாலும், தென்னை நார் கழிவு விலை குறைவாகவும், நாற்று விடுவதற்கு ஏற்ற ஊடகமாக இருப்பதாகக் கூறி வழிமுறைகளை விளக்கினார். Pleurotus என்ற காளான் வித்தைக் கொண்டு தென்னை நார்க் கழிவை மக்கவைத்து அத்துடன் ரசாயன உரங்கள் உயிரியல் ஊரங்கள் கலந்து தயாரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்வதாகக் கூறினார். குழி தட்டில் சிறிய குழியாக இருக்கும். அதில் இருக்கும் சிறிய அளவு ஊடகம் செடி வளர்ச்சி தேவைக்கு அனைத்து சத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செடி வளர்ப்பிற்கு எப்படி ஆறப்போட்டு பக்குவபட...

பாத்தி அமைக்கும் முறை

 பயிர்தொழிலில் இரு வகையாக பாத்தி அமைப்பர். நில மட்டத்திற்கு அமைக்கும் பாத்தியை குழிப் பாத்தி என்றும், நில மட்டத்திலிருந்து சற்று மேடாக அமைப்பதை பார் அல்லது மேட்டுப்பாத்தி என்பர். நீர் மற்றும் மழை குறைவாக இருக்கும் இடங்களில் முக்கியமாக கீரை சாகுபடிக்கு குழி பாத்தி சதுர அல்லது செவ்வக வடிவில் அமைப்பதுண்டு. மழை பொழிவு அதிகம் உள்ள இடங்களிலும், நீரை மிச்சப்படுத்துவதற்கும் செடி வளர்ச்சியை செம்மை படுத்துவதற்காக அமைக்கப்படுவது மேட்டுப்பாத்தியாகும். பாசனம் செய்ய வசதியாக இருக்க மேட்டுப்பாத்தியின் அகலத்தை சுருக்கி நீளவாக்கில் அமைத்து அதை ஒட்டி பாசனத்திற்கு கால்வாயும் அமைப்பர். இதை ஆங்கிலத்தில் bund and pit method எனக் கூறுவதுண்டு. மேட்டுப்பாத்தி அமைப்பில் நீரை 50% ற்கு மேல் மிச்சப்படுத்தலாம். அது மட்டுமல்ல செடியின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். செடியின் வளர்ச்சி வேரின் வளர்ச்சியை சார்ந்து இருக்கும். வேர் படர்ந்து விரிவடைந்தால் செடியின் வளர்ச்சி அதற்கேற்றார் போல் அமையும். அந்த வகையில் இந்த மேட்டுப்பாத்தி, குழி முறையானது வேர் வளர்ச்சியை தூண்டும் ஓர் அமைப்பாக அமைகிறது. நீரானது சாய்மானம் அல்ல...

மண் வளம் Soil health வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை

 வணக்கம் வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை மண் வளம் பற்றி என்னோட புரிதலை இங்கே பகிர்கிறேன், (Mrs. Ajeetha Veerapandian) நீங்களும் மண்பற்றிய உங்கள் அனுபவங்களை பதிவிடலாம்........ நிலம்...மண் விவசாயம், மாடிதோட்டம் வாழ்நாள் முழுவதும் செய்தாலும் தினம் ஒரு அனுபவம்... மாடிதோட்டத்திற்கோ, விவசாயத்திற்கோ மண் வளம் மிக முக்கியம், ஒரு ஊரின் மண்வளத்தை வைத்துதான் இங்கே இந்த பயிர் விதைக்கலாம் னு கண்டுபிடிச்சிருவாங்க பெரியவங்க, நாமலும் மிக எளிமையா கண்டுபிடிக்கலாம், அதாவது மண்ணில் ஈரம், காற்று ஊடுருவும் தன்மை, மணம், இவையெல்லாம் சேர்ந்த பொலபொலப்பு தன்மை இருக்கவேண்டும்..... உதாரணமா எங்க ஊரை சொல்கிறேன், ( விருதுநகர் ).....எங்கள் கிராமத்தில் ( அயன்ரெட்டியாபட்டி ) , மழை நீரில் மட்டுமே விவசாயம் அதாவது மானாவாரி நிலம் ( மழைபெய்தால் விவசாயம் ).....அப்படியிருந்தாலும் அந்த மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகம் அதனால் நுண்ணுயிர்கள் அதிகம் வாழ்கிறது மண் மேலே பொலபொலப்புத்தன்மையோடு இருந்தாலும் வேர்பரவி அதன்பிடிப்புத்தன்மையும் பலமாகவும், அதிக வளர்ச்சியும் இருக்கு, ஆவணி புரட்டாசிதான் மழை....ஐப்பசி கார்த்திகை ...

மண் வளப்படுத்தும் முறை How to enrich your soil

 வணக்கம் மண் வளப்படுத்தும் முறை என் அனுபவம் புரிதல் by Mrs. Ajitha Veerapandian ...... துள்ளித்திரியும் வயதில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு கோழி நாய் பூனை இப்படி ஏதாவது ஒரு உயிர், ஏன்  குருவி கூடுகள் கூட அதிகம் இருக்கும், மனிதன் மட்டுமன்றி எல்லா உயிரனங்களும் இணைந்து வாழும், ஒரு சங்கிலி தொடர்பு இருக்கும்..... காலையில் சாணி கலந்த தண்ணீர்தான் வாசல் தெளிப்பாங்க, இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, தண்ணி தெளிச்சிட்டு பெருக்கி கூடையில் அள்ளுவாங்க, ( இதில் எல்லா வீட்டு குப்பைகளும் அடங்கும் ) அப்படியே ஒரு வீட்டு ஒரு எருகிடங்கு இருக்கும் கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி அதில்தான் குப்பைகள் சேகரிக்கப்படும், காலையில் ஒரு 6 மணிக்கெல்லாம் அள்ளிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போவோம், அந்த காலை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும், தும்பைசெடியில் அதிகம் நிற்கும் அந்த குப்பை கூடையை வைச்சே பட்டாம்பூச்சி பிடிப்போம் விடுவோம் இது காலைநேர விளையாட்டு, அந்த எரு கிடங்கில் செழிபான தக்காளி செடி, கேந்திப்பூ செடி கிடைக்கும் எடுத்துவந்து வீட்டில் நடுவோம், வெள்ளரி, மிதுக்கங்காய், மஞ்சள் பூசணி எர...

Gardening Tips to remove ants Benefits of Turmeric water

 சிவப்பு எறும்பு என்று வரும் போது சிறிய பெரிய வகை உள்ளது. வீட்டில் அதிகமாக இனிப்பு பண்டங்களில் சிறிய வகையே பெரும்பாலும் காணப்படும். இந்த வகை செடிகளில் காணும் போது அவை செடியில் உள்ள பூ, காய்களை அரித்துண்ணும். பெரிய எறும்பில் முசுறும் ஒன்று. அதிகமாக மாமரத்தில் காணப்படும். இவை மற்ற பூச்சி புழுக்களை உண்ணும் தன்மை கொண்டது. வெண்டையில்  சிறு  எறும்பு பூக்களை காய்களை பாதிக்கிறது என்றால் மஞ்சள் தூள் கரைசல் நல்ல பலனைத் தரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரச்சனை தீரும் வரை தெளிக்கவும். நான்கைந்து தெளிப்பிற்கு ஒரு முறை மஞ்சள் தூளுடன் பட்டாணி அளவு வெற்றிலைச் சுண்ணாம்பு கலந்து ஒன்று அல்லது இரு முறை தெளிக்கவும். சுண்ணாம்பின் காரத்தன்மை அதாவது எரிக்கும் சக்தி பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பை அளவிலும் சரி அடிக்கடி தெளிப்பையும் கண்டிப்பாக தவிர்க்கவும். உப்பு களைச் செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவர். ஆகையால் நீங்கள் எறும்பிற்காக பயன்படுத்த விரும்பினால் உட்பு கரைசலை களைச் செடி மேல் தெளித்து பார்த்த பின் முதன்மை செடிக்கு தெளிக்கவும். உப்பு கரைசல் நீர்த்த நிலையில் இருப்பது மி...

வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள் Black Gold | How to make organic manure

Image
 வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள்..... நம் வீட்டு சமையலறை கழிவுகளை இரு வகையில் தோட்டத்திற்கு உரமாக்கலாம் ...... 1 .  காயவைத்து உபயோகிப்பது 2. மட்கவைத்து ( ஈரகழிவுகள் ) உபயோகிப்பது காயவைத்து உபயோகிப்பது.... நாம் காய்கறி நறுக்கும் போது கிடைக்கும் தோல், கீரை தண்டுகள், இப்படி நிறைய கிடைக்கும்..இதை அப்படியே சேர்த்துவைச்சா இடம் நிறைய தேவைப்படும், தோல் தண்டுகள் இப்படி கிடைப்பதை பொடியா நறுக்கி ஒரு பையில் போட்டு ஏதாவது வெயில் படும் இடத்தில் வைச்சிட்டு உங்களுக்கு தோனும் போது கிண்டிவிட்டா போதும் இப்ப அடிக்கிற வெயிலுக்கு சறுகா காய்ஞ்சிடும்.... இதை மாடிதோட்டம் வைக்கும்போது தொட்டிக்கு அடியில் இந்த காய்ந்த காய்கறி கழிவுகள் போட்டு அதன்மேல் மண் போட்டு செடி வைக்கலாம், காலபோக்கில் அந்த காய்ந்த காய்கறி கழிவுகள் மட்கி மண்ணோடு கலந்துடும்....இரண்பாவது இப்பொதுள்ள வெயிலுக்கு மூடாக்காகவும் உபயோகிக்கலாம்..... ஈரக்கழிவுகள் அதாவது அழுகிப்போன பழம், கீரைகள், வடிகட்டிய கசடுகள் இப்படிபட்ட கழிவுகளை ஒரு 10 லிட்டர் தண்ணீர் கேன் குழாயுடன் இருந்தாலும் நல்லது இல்லேனாலும் பரவாயில்லை, அதில் இந்த ஈரகழிவுகளை போட்டுட்டு...

மிளகாய் ரகங்கள் Some rare varieties of chilly

Image
காரம் மிகுந்த புல்லட் மிளகாய்.   தட்டையாக படர்ந்து விரிந்து வளரும் புல்லட் மிளகாய் செடி. கிளைகள் மேல் நோக்கி வளராமல் தட்டையாக பக்கவாட்டில் பரந்து வளருவதால் அதிக பூக்கள் பூத்து காய்களும் அதிகம் கிடைக்கிறது. Flat canopy plant. நீளமான கருப்பு மிளகாய்.  நல்ல மனம் அதிக காரம் மற்றும் அதிக காய்ப்பு. இத்துடன் கருப்பு ரகங்கள் மட்டும் 12.

சீகைகாய் செடி வீட்டில் விதையிட்டு வளர்ந்துவிட்டது... ஆனால் 4 மாதம் ஆகியும், சிறியதாகவே உள்ளது. செடி பராமரிப்பு பற்றி கூறவும்? வெயிலில் வைக்க வேண்டுமா? நிலத்திலேயே வந்துவிட்டது.

 Ans 1:  பயிர் தொழில், விவசாயம் என்று வரும் பொழுது அது சிறந்து விளங்க அடிப்படையில் ஆதாரமாக இருப்பது மண் வளம் தான். வளம் இல்லாத மண்ணில் செடிகள் செழிப்பாக வளராது. செடி வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியம். தாவரத்தைப் பொருத்து சூரிய ஒளி தேவை முன்னும் பின்னும் இருக்கும். பொதுவாக பயிர் செய்வதானாலும் சரி செடி நடுவதாக இருந்தாலும் சரி மண்ணை வளப்படுத்திய பின் தான் செய்வார்கள். அப்படி வளப்படுத்தாத நிலையில் நீங்கள் செடிக்கு மேலுரம் கொடுத்திருந்தால் செடி வளர்ச்சி பெற்றிருக்கும்.  காய்ந்த இலைகளை கொண்டு செடியை சுற்றி மூடாக்கிட்டு மாதமிருமுறை ஜீவாமிர்தம், அமர்தகரைசல், மீன் அமிலம் இதில் ஏதேனும் ஒன்றை நீர் பாசனத்தில் கலந்து விடவும். பூச்சி விரட்டி 5-6 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும். Ans 2: எடுத்து வேற இடத்தில் நடுங்க, கொஞ்சமாவது சூரியஒளி வேண்டும்.....மரத்திற்கு கீழ் கீரைகள் பூச்செடிகள் வைங்க...