இயற்கை மீட்பு வேளாண்மை மூலம்
வேளாண்மையில் இரு வகை நஞ்சை புஞ்சை புஞ்சை வேளாண்மை மிக எளிது. விற்பனையில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். இப்பொழுது நஞ்சை வேளாண்மை குறித்து காண்போம். தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் முறை நஞ்சை ஆகும். தண்ணீர் இல்லாதவர்களுக்கு நஞ்சை வேளாண்மை சாத்தியமா? சாத்தியமே!!! நஞ்சை வேளாண்மைக்கு நமக்கு தேவையான 4 விசயங்கள்: 1) விதைகள் & நாற்று 2) மூடாக்கு 3) மனித உழைப்பு 4) விற்பனை நஞ்சை விவசாயிகள் அனைவருமே மேற்கூறிய 1,3,4 விசயங்களை நன்றாகவே அறிவர். இந்த 3 விசயங்களுக்கும் ஒரு பெரிய செலவு செய்வர். இந்த 3 விசயங்களிலும் தற்சார்பு இன்றி திரும்ப திரும்ப போராடுவர். இந்த உலகிலேயே மிகுதியாக சுரண்டப்படும் ஒருவர் என்றால் அது நம் நஞ்சை விவசாயியே. ஏன் இந்த சிக்கல்? மரபு விதைகளை மறந்ததன் விளைவு. உடனே விவசாயிகளை திட்ட தொடங்க வேண்டாம். அவர்களால் தான் நாம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மரபு விதைகளை நுகர்வோர் புறக்கணித்ததன் விளைவே. சரிங்க மீண்டும் நஞ்சை வேளாண்மைக்கு வருவோம். நம் தாத்தா பாட்டியின் தாத்தா பாட்டி காலத்தில் நஞ்சை புஞ்சை வேறுபாடு பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது உள்...