Posts

Showing posts with the label agri conference

தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல் Conference of of TN south district farmers

 தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல்,  சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பு: **************          இன்றைய சூழலில் யார் ஒருவரும் கணிக்க முடியாத நிலையில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது . இந்நிலை தொடந்து நீடித்தால் இப்புவியில் மனிதர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி தான் என்பதை நம்மாழ்வார் ஐயா ஒவ்வொரு நாளும் சுட்டிக் காட்டினார்.        இதன் விளைவாக ஒருபுறம் மேக வெடிப்பால் வெள்ளமும் , ஒருபுறம் மழையில்லாமல் வறட்சியும் தொடர்கிறது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது.        அதைத் தான் இந்தாண்டுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம். விதைக்கும் நேரத்தில் மழை பெய்யாது அறுக்கும் நேரத்தில் கொட்டி தீர்த்துவிடுகிறது. விதைத்த தானியங்கள் வீடு வந்து சேர்ப்பதே நெருக்கடி. அந்தளவுக்கு பன்னாட்டு வணிக முறையால் வேளாண்மையும், வாழ்வியலும் சிதைந்துள்ளது.            இந்நிலையை கருத்தில் கொண்டு செலவு குறைந்த நிலைத்த நீடித்த வேளாண்மை முறையை , இன்று நம்மாழ்வார் ஐயா வழி உழவர்கள் பின்பற்றி வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார...