Posts

Showing posts with the label organic

உறங்கும் விதைகள் உயிர் பெறும் பயணம்!!! A Journey of sleeping seeds

உறங்கும் விதைகள் ( உறக்கத்தில் உள்ள ஒரு செடி ) உயிர் பெறும் பயணம்.....  வணக்கம்  * விளைகின்ற பயிரில் நன்கு விளைந்த பயிரில் இருந்து தேறிய விதைகளை மட்டும் எடுப்பது * அதை பானை அல்லது மண்குதிர்களில் பாதுகாத்தார்கள் * சேமிப்பின்போது பூச்சி தின்றுவிடாமல் இருக்க நொச்சி, புங்கம் போன்ற தாவரங்களின் இலைகளை விதைமீது பரப்பி வைத்தார்கள் * விதை சேமிப்பிற்கு முன்பு மூன்று அமாவாசை நாட்களில் வெயிலில் உலர்த்தி பின்பே சேமித்தார்கள் * விதைகளை உழவர்கள் கைமாற்றிக்கொண்டார்கள் * சாம்பலில் விதைகளை புரட்டி விதைநேர்த்தி செய்யப்பட்டது, எறும்பு, எலி, குருவி பொறுக்கிவிடாமல் இருப்பதற்கு * உரிய நேரம் காலம் பார்த்து விதையை நிலத்தில் இட்டு நீர்விடும் ( மழை) போது விதை உயிர்பெறுகிறது..... விதை என்பது வருங்கால சமுதாயத்தின் உயிர் வாழ்க்கையின் அடிப்படை... - Ajitha Veerapandian

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1 எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? கேள்வி 2 வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்?  கேள்வி  3 மண்புழு உரம் ஏன் ? Answers 1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்... மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது 1&2 , மண் புழு  3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்... * பதில் 1= மண்புழு * பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து...

ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன

 நாட்டு பசு மாடே போதும்!‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல… அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்… காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க… சடசடவென பொழிந்தார் பாலேக்கர் ”ரசாயன விவசாயம் வேண்டாம்… இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள் சிலர். ‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போடுங்கள்’, ‘பொட்டாஷ் தேவையில்லை… ஆர்கானிக் உரம் போதும்’, ‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்… பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள். ‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல… காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிட...

சிறிய உணவு காடு Self sustainable food forest

Image
 நீண்ட நாட்களாக சிறிய உணவு காடு அமைக்க வேண்டும் என்பது விருப்பம். விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய முயற்சியாக 10 சென்ட் நிலத்தில் கனவு தோட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.. இதில் எங்களுடைய பணி விதைப்பது மற்றும் அறுவடை இடையே தேவை இருப்பின் நீர் கொடுக்கின்றது மட்டுமே இருக்க வேண்டும் என்பது விருப்பம். சில நாட்கள் பிறகு விதைப்பதும் & நீர் கெடுப்பதும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். தோட்டத்தில் அதிகபட்ச இடுபொருட்கள் மூடாக்கு, சாம்பல் & புண்ணாக்கு கரைசலே. முடிந்த அளவு எந்த பூச்சி விரட்டியும் உபயோகிக்க வேண்டாம் என்று இருக்கிறோம், அது இயற்கை முறையில் தயாரித்தால் கூட வேண்டாம். ஏன் என்றால் இது ஒரு உணவு காடாக உருவாக்க வேண்டும், நம்முடைய தலையீடு அதிகமாக இருக்க கூடாது. விதைகள் நன்பர்கள் பகிர்ந்தது, தற்போது. காட்டில் உள்ள செடிகள். மா, எலூமிச்சை, கொய்யா, நெல்லி 2 வகை, நாவல், அத்தி, வாழை 5 வகை, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, முருங்கை, தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, மிளகாய், சுண்டகாய், காரமணி, மக்காச்சோளம், மரவள்ளி, சக்கரவள்ளி, பிரண்டை, மணத்தக்காளி...