Posts

Showing posts with the label Healthy food

காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Image
Scroll down for English Version  முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையதாக இருக்கிறது. அதில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது.  அந்தவகையில் தானியங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்து கொள்வோம். முளைகட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.  ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.   முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. முளைகட்டிய ப...

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும் Healthy Snake guard

 புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சி...

திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

Image
  பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென் சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "...

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 7 ம் நாளுக்கான உணவு காலை அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு மதியம் அவல் புட்டு சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் .. மாலை எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது) இரவு  பழங்கள் தேங்காயின் பயன்கள் * உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும் * அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும் * உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது * கெட்ட கொழுப்பை அகற்றும் * இரத்தம் சுத்தமாகும் * உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும் * பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்.... 11 மணிக்கு Detox water கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும் மதியம் வெண்பூசணி அவல் சாதம் துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்.... மாலை அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும் இரவு பழங்கள் * வெண்பூசணி குடல் புண் ஆற்றும் * எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும் * வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும் * உடல் குளிர்ச்சியாகும் * வேர்கடலை களைப்பு நீக்கும் * detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும் * அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும் 11 மணிக்கு  Detox water கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும் மதியம் அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும் மாலை இரண்டு துண்டு வெண்பூசணி  இரவு  7 மணிக்குள் இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ... பழங்கள்.... மதியம்

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வெண்பூசணி ஜூஸ் வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்.... எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும் Detox water 11 am புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்) மதியம் தேங்காய் பால் + அவல் கலவை மாலை கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும் இரவு  பழங்கள் * செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்  *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏 3 ம் நாளுக்கான உணவு.... காலை கொத்தவரங்காய் ஜூஸ் கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும் 11 மணிக்கு Detox water கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும் மதியம் நவரத்னா அவல் கலவை வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும் மாலை வாழைப்பழ பேடா வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும் இரவு  பழங்கள் கொத்தவரங்காய் *கொத்தவரங்காய் நரம்பு பலப்படும் * சிரங்கு, வேர்கூரு குணமாகும் * கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும் * பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும் * நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும் * சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏 கத்தரிக்காய் ஜூஸ் கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )... கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்..... மதியம்  தக்காளி அவல் சாதம்.... தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை..... மாலை (5 மணிக்குள்) Detox water... கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1.... 👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்.... இரவு கொய்யாபழம் * கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்.... * தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும் Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

Image
 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 தேதி:  19/06/2021   நேரம்:3:30 PM to 5:00 PM Topic: மண் வளம் அறிவோம் (Soil Science) நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan Mrs. Priya Rajnarayanan  ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும். SeedsIsland Team is inviting you to a scheduled meeting. https://youtu.be/XSWHLCCtbpI Or Join Zoom Meeting https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09 Meeting ID: 947 033 1037 Passcode: nF5j3H Or https://www.facebook.com/seedisland.seedisland/

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

Image
 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி  தயாரிக்கும் முறை :- 🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿  பல்பொடி தயாரிக்க😁  தேவையான பொருட்கள் :- கிராம்பு பொடி                - 25 கிராம் கடுக்காய்  பொடி           - 40  கிராம் ஆலம் பட்டை பொடி.    - 25 அக்ரகாரம் பொடி          -10 கிராம் நாயுருவி வேர் பொடி  - 25 கிராம் கல் உப்பு பொடி              - 10 கிராம் இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.. 1 . கிராம்பு - பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும். 2 . கடுக்காய் -  அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் ...

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய் 🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋 ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய் கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின் ஆப்பில்170.ருபாய் தான் . 🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது. 👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது. 🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும். 🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம்.  🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரை...

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ்... 🌿🌳👏🙏👌🌼👆🧊💧 இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம். மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம். 1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம் பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை. மண் பானை போலதான் ! பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது.  தக்காளி + மிளகாய் 10 நாள். வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள் சாலட் காய் கறிகள் லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள் இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம் உருளை+மரவள்ளி 3 மாதம் கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை.  16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது. பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள். உடல் கெடாது. மனம் கெடாது. திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம்  கருமத்தம்பட்டி கோய...

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋               23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது.            மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது.        ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁 நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்... அருகம்புல் ஜுஸ் லெமன்புதினா ஜுஸ் முக்கனி சாலட் வல்லாரை கீர் எனர்ஜிலட்டு நுங்கு பாயாசம் வேர்க்கடலை சாலட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் பேபிகார்ன் சாலட் பூசண...

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்.... நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...    முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம்.                 பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.        அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.            ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர...

No Oil, No Boil... Healthy ayul... புற்றுநோயை குணமாக்கும்.... சிறுநீரக மண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய் மில்க் சேக்

 No Oil, No Boil...  Healthy ayul...🌿🙏  புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅 தேவையானபொருட்கள் நாட்டுகத்திரிக்காய் - 4 தக்காளி - 2 தேங்காய்ப்பால் - 50 மில்லி, வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப், ஏலக்காய் 4 செய்முறை  கத்திரிக்காய், தக்காளி ஆகியவைகளை துண்டுகளாக  வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம். ருதம்பராயோகா கோவை.

​ரோஜா குல்கந்து செய்முறை how to make gulkand at home

Image
 நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே  தயார் செய்வது எப்படி. .? 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 குல்கந்து செய்முறை 🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். 🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.  🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும்.  🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். 🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும். 🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க.... 🍁ருதம்பரா யோகா கோவை.

வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் Fenugreek water benefits

Image
 வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்.. ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள். வெந்தய டீ தயாரிப்பது எப்படி? ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள். இப்போது வெந்...

உணவே மருந்து. அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !

Image
 அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க ! கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம். கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய  நூலில் .... நெஞ்சின் கபம் போம் நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே* - அகத்தியர் நெஞ்சில் எந்த கபச் சளியும் நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும். அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம்  தப்பி விடுமா என்ன ! சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும். உணவே மருந்து.🌿🙏 சுண்டைகாய் வத்தலை பொடித்து கசாயம் செய்யலாம்.... சுண்டைக்காய் துவையல், குழம்பு, தொக்கு, சட்னி என ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி பலன்பெறு...

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்!!! வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!

Image
 கொல்லும் பிடரிதனை கோழையாமே.... சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்.... நுரையீரல் மட்டுமல்லாது உடலில் தேங்கும் கோழையை விரட்டும்.... வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!🌿🙏 🌿🍁முக்கூட்டு சூரணம் காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக மூலிகை கடைகள், காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்). இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளில் இருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள், சளிபடலங்கள் வெளித் தள்...