Posts

Showing posts with the label terrace garden

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

Image
 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை * கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது.  * அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை. Mr. Balaraman Maneri Mrs.V.Priya Rajnarayanan  பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் https://youtu.be/bMtLZfTHzPc

மண் வளம் Soil health வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை

 வணக்கம் வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை மண் வளம் பற்றி என்னோட புரிதலை இங்கே பகிர்கிறேன், (Mrs. Ajeetha Veerapandian) நீங்களும் மண்பற்றிய உங்கள் அனுபவங்களை பதிவிடலாம்........ நிலம்...மண் விவசாயம், மாடிதோட்டம் வாழ்நாள் முழுவதும் செய்தாலும் தினம் ஒரு அனுபவம்... மாடிதோட்டத்திற்கோ, விவசாயத்திற்கோ மண் வளம் மிக முக்கியம், ஒரு ஊரின் மண்வளத்தை வைத்துதான் இங்கே இந்த பயிர் விதைக்கலாம் னு கண்டுபிடிச்சிருவாங்க பெரியவங்க, நாமலும் மிக எளிமையா கண்டுபிடிக்கலாம், அதாவது மண்ணில் ஈரம், காற்று ஊடுருவும் தன்மை, மணம், இவையெல்லாம் சேர்ந்த பொலபொலப்பு தன்மை இருக்கவேண்டும்..... உதாரணமா எங்க ஊரை சொல்கிறேன், ( விருதுநகர் ).....எங்கள் கிராமத்தில் ( அயன்ரெட்டியாபட்டி ) , மழை நீரில் மட்டுமே விவசாயம் அதாவது மானாவாரி நிலம் ( மழைபெய்தால் விவசாயம் ).....அப்படியிருந்தாலும் அந்த மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகம் அதனால் நுண்ணுயிர்கள் அதிகம் வாழ்கிறது மண் மேலே பொலபொலப்புத்தன்மையோடு இருந்தாலும் வேர்பரவி அதன்பிடிப்புத்தன்மையும் பலமாகவும், அதிக வளர்ச்சியும் இருக்கு, ஆவணி புரட்டாசிதான் மழை....ஐப்பசி கார்த்திகை ...

மண் வளப்படுத்தும் முறை How to enrich your soil

 வணக்கம் மண் வளப்படுத்தும் முறை என் அனுபவம் புரிதல் by Mrs. Ajitha Veerapandian ...... துள்ளித்திரியும் வயதில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு கோழி நாய் பூனை இப்படி ஏதாவது ஒரு உயிர், ஏன்  குருவி கூடுகள் கூட அதிகம் இருக்கும், மனிதன் மட்டுமன்றி எல்லா உயிரனங்களும் இணைந்து வாழும், ஒரு சங்கிலி தொடர்பு இருக்கும்..... காலையில் சாணி கலந்த தண்ணீர்தான் வாசல் தெளிப்பாங்க, இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, தண்ணி தெளிச்சிட்டு பெருக்கி கூடையில் அள்ளுவாங்க, ( இதில் எல்லா வீட்டு குப்பைகளும் அடங்கும் ) அப்படியே ஒரு வீட்டு ஒரு எருகிடங்கு இருக்கும் கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி அதில்தான் குப்பைகள் சேகரிக்கப்படும், காலையில் ஒரு 6 மணிக்கெல்லாம் அள்ளிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போவோம், அந்த காலை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும், தும்பைசெடியில் அதிகம் நிற்கும் அந்த குப்பை கூடையை வைச்சே பட்டாம்பூச்சி பிடிப்போம் விடுவோம் இது காலைநேர விளையாட்டு, அந்த எரு கிடங்கில் செழிபான தக்காளி செடி, கேந்திப்பூ செடி கிடைக்கும் எடுத்துவந்து வீட்டில் நடுவோம், வெள்ளரி, மிதுக்கங்காய், மஞ்சள் பூசணி எர...

Winged Beans சிறகு அவரை

Image
 Winged bean என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த காய்கறி தாவரம் கிழக்காசியாவில் பெரிதும் விரும்பி வளர்க்கப்படும் கொடி தாவரமாகும். இந்த தாவரத்தின் இலை அவரை போன்று இருப்பதால் இதை அவரை ரகமாக கருதி winged bean தமிழாக்கமாக சிறகு அவரை என்றும், இந்த காயிற்கு நான்கு பட்டை/பக்கங்கள் இருப்பதால் காரணப் பெயராக சதுர அவரை என்றும் குறிக்கப்படுகிறது. நாட்டு மருத்துவத்தில் செடியின் அனைத்து பாகங்களை குறிக்கும் விதமாக சமூலம் என்று வார்த்தையை பயன்படுத்துவர். இத்தாவரத்தின் அனைத்து பாகங்களும் வேரிலிருந்து செடியின் நுனி வரை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால், கீழை நாடுகளில் அதிகமாக பயிரப்படுகிறது. விதை மற்றும் கிழங்குகளைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்யலாம். கிழங்கையும் சமைக்கலாம். இது பல்லாண்டு தாவரமாகும். காய்ப்பு முடிந்ததும் கவாத்து செய்து செடியை பராமரித்து வந்தால் , உரிய நேரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அப்படியே செடி பட்டு போனாலும், மண்ணில் உள்ள கிழங்கின் மூலமாக மழை வந்ததும் துளிர்ந்து வளரும். Cool climate crop என்று குறிக்கப்படும் தாவரம் ஒரு சம்பா ரக பயிராகும். ஆடிப் பட்டத்தில் விதைத்தால்...

சீகைகாய் செடி வீட்டில் விதையிட்டு வளர்ந்துவிட்டது... ஆனால் 4 மாதம் ஆகியும், சிறியதாகவே உள்ளது. செடி பராமரிப்பு பற்றி கூறவும்? வெயிலில் வைக்க வேண்டுமா? நிலத்திலேயே வந்துவிட்டது.

 Ans 1:  பயிர் தொழில், விவசாயம் என்று வரும் பொழுது அது சிறந்து விளங்க அடிப்படையில் ஆதாரமாக இருப்பது மண் வளம் தான். வளம் இல்லாத மண்ணில் செடிகள் செழிப்பாக வளராது. செடி வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியம். தாவரத்தைப் பொருத்து சூரிய ஒளி தேவை முன்னும் பின்னும் இருக்கும். பொதுவாக பயிர் செய்வதானாலும் சரி செடி நடுவதாக இருந்தாலும் சரி மண்ணை வளப்படுத்திய பின் தான் செய்வார்கள். அப்படி வளப்படுத்தாத நிலையில் நீங்கள் செடிக்கு மேலுரம் கொடுத்திருந்தால் செடி வளர்ச்சி பெற்றிருக்கும்.  காய்ந்த இலைகளை கொண்டு செடியை சுற்றி மூடாக்கிட்டு மாதமிருமுறை ஜீவாமிர்தம், அமர்தகரைசல், மீன் அமிலம் இதில் ஏதேனும் ஒன்றை நீர் பாசனத்தில் கலந்து விடவும். பூச்சி விரட்டி 5-6 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும். Ans 2: எடுத்து வேற இடத்தில் நடுங்க, கொஞ்சமாவது சூரியஒளி வேண்டும்.....மரத்திற்கு கீழ் கீரைகள் பூச்செடிகள் வைங்க...