இலைத்தேள் கடியும் அதன் வைத்திய முறையும் the truth behind the leaf scorpion viral video
ஜெனி கார்த்திக்கு நிகழ்ந்த அனுபவம்🌿🌿 இடம்: லைபீரியா நம் குழுவிலேயே இதற்கு முன் இளைத்தேள் என ஒரு காணொளி சுற்றிக் கொண்டிருந்தது.. அதில் சில உண்மையும் இருக்கிறது.. கை வைத்தியம் : -------------------- நேற்று என் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டு தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் மிளகுக் கொடி, கொடி ரோஜா, பிரண்டை, சிவப்பு பசலை, தரையில் இஞ்சி என அனைத்தும் புதராக இருந்தது. திடீரென்று கையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு மற்றும் 2-3 குளவிகள்/தேனீக்கள் ஒன்றாக கொட்டியது போன்ற ஒரு வலி. முதலில் கட்டெறும்பு கடித்து இருக்குமோ என்றுதான் எண்ணினேன் ஆனால் கையை இலைச் சருகுகளுக்கிடையே கொண்டு சென்று எடுத்த அந்த கண்சிமிட்டும் நேரத்தில் கடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை பாம்பு எதுவும் கடித்து இருக்குமோ என பார்த்தால் கையில் பல் தடமும் இல்லை. வலி மோதிர விரல் நடுவிரல் மற்றும் கட்டை விரலில். சுற்றி முற்றி பார்த்தால் எந்த பூச்சியும் தென்படவில்லை. தேனீ கடந்தை குளவி என எதுவும் இல்லை. அரை மணி நேரம் கழித்தும் வலி அடங்க வில்லை. நெறிகட்டுவது போல ஒரு உணர்வ...