Posts

Showing posts with the label garden tips

உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips

 எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும்.  ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள். கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும். கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும். கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும். பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும். அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

Image
 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை * கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது.  * அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை. Mr. Balaraman Maneri Mrs.V.Priya Rajnarayanan  பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் https://youtu.be/bMtLZfTHzPc

நஞ்சில்லா விருந்து Food without Poison

 நஞ்சில்லா விருந்து இன்று எங்கள் திருமண நாளையோட்டி என்ன விருந்து செய்யலாம் என்று தோட்டத்திற்கு சென்றால் கத்திரிக்காய், அவரைக்காய், நாட்டு தக்காளி கிடைத்தது! தினமும் இதையே தான் குழம்பு வைக்கின்றோம் மாற்றி யோசிப்போம் என்று முடிவெடுத்தேன்!! வெளிநாட்டு காய்கறியான கேரட் , பீன்ஸ், கோஸ்  போட்டு தான் சைவ பிரியாணி வைத்து உண்டு இருக்கின்றோம்!! சரி வித்தியாசமாக நமது நாட்டு காய்கறிகள் பிரயாணி வைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு எண்ணம்!! உடனே வேட்டிய  கட்டிகிட்டு கத்திரக்காய், அவரைக்காய் ,தக்காளி பறிச்சிட்டு சமையல்கட்டுக்கு போனேன்!! அங்க நம்ம அறல் கழனியில் விளைந்த சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் பல்ல காட்டிகிட்டு இருக்க!! எல்லாரையும் பிடிச்சு ஒட்ட வெட்டினேன்!!  நடுவுல ஆற்காடு கிச்சலி பச்சரசி ஒரு பாத்திரத்தில போட்டு தண்ணீர் ஊற்றி மேல எண்ணெய் கொஞ்சம் தெளித்து, அதிலேயே சோம்பு , இலவங்கம் போட்டு வெற வெறன்னு மிலிட்டிரி ஆபிஸர் மாதிரி வெடிச்சு வச்சிட்டேன்!!! அந்த பக்கம் நம்ம அறல் மரச்செக்கு நல்லெண்ணெய் 100 மில்லி வானல்ல போட்டு கத்தரி, அவரை மட்டும் தனி தனியா எண்ணெய்ல சூடா குளிப்பாட்டி ...

Gardening Tips to remove ants Benefits of Turmeric water

 சிவப்பு எறும்பு என்று வரும் போது சிறிய பெரிய வகை உள்ளது. வீட்டில் அதிகமாக இனிப்பு பண்டங்களில் சிறிய வகையே பெரும்பாலும் காணப்படும். இந்த வகை செடிகளில் காணும் போது அவை செடியில் உள்ள பூ, காய்களை அரித்துண்ணும். பெரிய எறும்பில் முசுறும் ஒன்று. அதிகமாக மாமரத்தில் காணப்படும். இவை மற்ற பூச்சி புழுக்களை உண்ணும் தன்மை கொண்டது. வெண்டையில்  சிறு  எறும்பு பூக்களை காய்களை பாதிக்கிறது என்றால் மஞ்சள் தூள் கரைசல் நல்ல பலனைத் தரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரச்சனை தீரும் வரை தெளிக்கவும். நான்கைந்து தெளிப்பிற்கு ஒரு முறை மஞ்சள் தூளுடன் பட்டாணி அளவு வெற்றிலைச் சுண்ணாம்பு கலந்து ஒன்று அல்லது இரு முறை தெளிக்கவும். சுண்ணாம்பின் காரத்தன்மை அதாவது எரிக்கும் சக்தி பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பை அளவிலும் சரி அடிக்கடி தெளிப்பையும் கண்டிப்பாக தவிர்க்கவும். உப்பு களைச் செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவர். ஆகையால் நீங்கள் எறும்பிற்காக பயன்படுத்த விரும்பினால் உட்பு கரைசலை களைச் செடி மேல் தெளித்து பார்த்த பின் முதன்மை செடிக்கு தெளிக்கவும். உப்பு கரைசல் நீர்த்த நிலையில் இருப்பது மி...

வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள் Black Gold | How to make organic manure

Image
 வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள்..... நம் வீட்டு சமையலறை கழிவுகளை இரு வகையில் தோட்டத்திற்கு உரமாக்கலாம் ...... 1 .  காயவைத்து உபயோகிப்பது 2. மட்கவைத்து ( ஈரகழிவுகள் ) உபயோகிப்பது காயவைத்து உபயோகிப்பது.... நாம் காய்கறி நறுக்கும் போது கிடைக்கும் தோல், கீரை தண்டுகள், இப்படி நிறைய கிடைக்கும்..இதை அப்படியே சேர்த்துவைச்சா இடம் நிறைய தேவைப்படும், தோல் தண்டுகள் இப்படி கிடைப்பதை பொடியா நறுக்கி ஒரு பையில் போட்டு ஏதாவது வெயில் படும் இடத்தில் வைச்சிட்டு உங்களுக்கு தோனும் போது கிண்டிவிட்டா போதும் இப்ப அடிக்கிற வெயிலுக்கு சறுகா காய்ஞ்சிடும்.... இதை மாடிதோட்டம் வைக்கும்போது தொட்டிக்கு அடியில் இந்த காய்ந்த காய்கறி கழிவுகள் போட்டு அதன்மேல் மண் போட்டு செடி வைக்கலாம், காலபோக்கில் அந்த காய்ந்த காய்கறி கழிவுகள் மட்கி மண்ணோடு கலந்துடும்....இரண்பாவது இப்பொதுள்ள வெயிலுக்கு மூடாக்காகவும் உபயோகிக்கலாம்..... ஈரக்கழிவுகள் அதாவது அழுகிப்போன பழம், கீரைகள், வடிகட்டிய கசடுகள் இப்படிபட்ட கழிவுகளை ஒரு 10 லிட்டர் தண்ணீர் கேன் குழாயுடன் இருந்தாலும் நல்லது இல்லேனாலும் பரவாயில்லை, அதில் இந்த ஈரகழிவுகளை போட்டுட்டு...

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள் Farming proverbs

 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்  🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝 களர் கெட பிரண்டையைப் புதை  🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  🌝 நன்னிலம் கொழுஞ்சி  🌝நடுநிலம் கரந்தை  🌝கடை நிலம் எருக்கு 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை 🌝நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு  🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்  🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை  🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் 🌝 🌝மார்கழி மழை மண்ணுக்கு உதவாது  🌝 தை மழை நெய் மழை 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை  🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி  பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்  🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். 🌝 அடர விதைத்தால் போர் உயரும் நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. அன்புடன் உங்கள் விவசாய நண்பன்

சீகைகாய் செடி வீட்டில் விதையிட்டு வளர்ந்துவிட்டது... ஆனால் 4 மாதம் ஆகியும், சிறியதாகவே உள்ளது. செடி பராமரிப்பு பற்றி கூறவும்? வெயிலில் வைக்க வேண்டுமா? நிலத்திலேயே வந்துவிட்டது.

 Ans 1:  பயிர் தொழில், விவசாயம் என்று வரும் பொழுது அது சிறந்து விளங்க அடிப்படையில் ஆதாரமாக இருப்பது மண் வளம் தான். வளம் இல்லாத மண்ணில் செடிகள் செழிப்பாக வளராது. செடி வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியம். தாவரத்தைப் பொருத்து சூரிய ஒளி தேவை முன்னும் பின்னும் இருக்கும். பொதுவாக பயிர் செய்வதானாலும் சரி செடி நடுவதாக இருந்தாலும் சரி மண்ணை வளப்படுத்திய பின் தான் செய்வார்கள். அப்படி வளப்படுத்தாத நிலையில் நீங்கள் செடிக்கு மேலுரம் கொடுத்திருந்தால் செடி வளர்ச்சி பெற்றிருக்கும்.  காய்ந்த இலைகளை கொண்டு செடியை சுற்றி மூடாக்கிட்டு மாதமிருமுறை ஜீவாமிர்தம், அமர்தகரைசல், மீன் அமிலம் இதில் ஏதேனும் ஒன்றை நீர் பாசனத்தில் கலந்து விடவும். பூச்சி விரட்டி 5-6 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும். Ans 2: எடுத்து வேற இடத்தில் நடுங்க, கொஞ்சமாவது சூரியஒளி வேண்டும்.....மரத்திற்கு கீழ் கீரைகள் பூச்செடிகள் வைங்க...