மாற்றத்தை நோக்கி
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா விதை சேகரிப்பில் முக்கிய பங்காற்றிவருகிறார். தன் கணவர் தொழில் முனைபவர்,1 மகன் , 1 மகள் இருக்கிறார்கள். தொடக்க காலத்தில் தன் வீட்டு தேவைக்காக வீட்டு மாடியிலும் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய இடத்திலும் தங்கள் குடும்பத்திற்கான காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்தார். அதில் சேகரித்த விதைகளை விதைக்க வீட்டில் உள்ள இடம் போதவில்லை.பிறகு தன் வீட்டின் அருகில் உள்ள நண்பரின் 3 ½ சென்ட் இடத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வந்தார். இந்த 3½ சென்ட் இடத்தில் குடும்பத்திற்கான உணவு தேவையை நிறைவு செய்துள்ளார்.இப்பொழுது தமிழகம் முழுக்க விதை பரவலாக்கம் செய்து கொண்டு இருக்கிறார். தன் வேலையையும், வீட்டு வேலைகளையும் கவனித்து கொண்டு , குழந்தைகளையும் கவனித்து கொண்டு தோட்டத்தையும் பராமரித்து வருகிறார். பெண்கள் கைகளில் தான் விதை இருக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா கூறுவதிற்கு இணங்க, இவர் விதைகளை பேராயுதமாக எடுத்துக்கொண்ட...