மாறாத முருகனும் – மாறனும், மாயனும் தமிழ் சிறுகதைகள் தொகுப்பு - அழ.குழ.மா.அழகப்பன் tamil short story by M. Alagappan maaratha Muruganum Maranum mayanum
மாறாத முருகனும் – மாறனும், மாயனும் -----Alcohol is injurious to health---- "முருகனுக்கு ஒரு பொண்ணு பாருங்க. இப்படியே போச்சுன்னா குடிச்சு கும்மாளமடிச்சு வீணா போயிடுவான்" என்றார் ராகவி கருப்பசாமியிடம். அதற்கு கருப்பசாமி, "அவனுக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான். யாருகிட்ட போய் பொண்ணு கேட்பேன். புரிஞ்சு தான் பேசுறீயா. எந்த வேலைக்கு போனாலும் 6 மாசம் கூட இருக்க மாட்றான். அவனுக்கு ஒரு பொண்ண கட்டி வச்சு அந்த பொண்ணோட வாழ்க்கையும் பாழாக்க சொல்றியா. அந்த பாவத்தை வேற சுமக்க சொல்றியா. அவன் பாட்டுக்கு இப்படியே இருக்கட்டும்." என்றார் "வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகமுனு பேறு வச்சானாம். அது மாதிரில இருக்கு நீங்க சொல்றது, எவனையோ சொல்ற மாதிரி சொல்றீங்க. நம்ம பிள்ளைங்க அவன். அவனுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சா, கண்டிப்பா அவன் நல்லா இருப்பான். போனவாரம் ஜோசியர பார்த்தப்போ அவரு சொன்னாரு அவனுக்கு ஒரு கால்கட்ட போட்டா எல்லாம் சரியாகிடும்னு" என்றார் ராகவி. கருப்பசாமி "அதெல்லாம் சரி நாம யார்கிட்ட போய் பொண்ணு கேட்கிறது....