நஞ்சில்லா விருந்து Food without Poison
நஞ்சில்லா விருந்து இன்று எங்கள் திருமண நாளையோட்டி என்ன விருந்து செய்யலாம் என்று தோட்டத்திற்கு சென்றால் கத்திரிக்காய், அவரைக்காய், நாட்டு தக்காளி கிடைத்தது! தினமும் இதையே தான் குழம்பு வைக்கின்றோம் மாற்றி யோசிப்போம் என்று முடிவெடுத்தேன்!! வெளிநாட்டு காய்கறியான கேரட் , பீன்ஸ், கோஸ் போட்டு தான் சைவ பிரியாணி வைத்து உண்டு இருக்கின்றோம்!! சரி வித்தியாசமாக நமது நாட்டு காய்கறிகள் பிரயாணி வைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு எண்ணம்!! உடனே வேட்டிய கட்டிகிட்டு கத்திரக்காய், அவரைக்காய் ,தக்காளி பறிச்சிட்டு சமையல்கட்டுக்கு போனேன்!! அங்க நம்ம அறல் கழனியில் விளைந்த சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் பல்ல காட்டிகிட்டு இருக்க!! எல்லாரையும் பிடிச்சு ஒட்ட வெட்டினேன்!! நடுவுல ஆற்காடு கிச்சலி பச்சரசி ஒரு பாத்திரத்தில போட்டு தண்ணீர் ஊற்றி மேல எண்ணெய் கொஞ்சம் தெளித்து, அதிலேயே சோம்பு , இலவங்கம் போட்டு வெற வெறன்னு மிலிட்டிரி ஆபிஸர் மாதிரி வெடிச்சு வச்சிட்டேன்!!! அந்த பக்கம் நம்ம அறல் மரச்செக்கு நல்லெண்ணெய் 100 மில்லி வானல்ல போட்டு கத்தரி, அவரை மட்டும் தனி தனியா எண்ணெய்ல சூடா குளிப்பாட்டி ...