மூலிகைதண்ணீர் Mooligai water Ayurvedic drinking water | Aarokya Vazhkkai

 மூலிகைதண்ணீர்


கோடை காலம் வந்து விட்டது.வெப்ப நோய் களிடம் இருந்து உங்களை காக்க, உடல் குளிர்ச்சி அடையை இன்னும் பலவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள


நிறைய தண்ணி குடிங்க,

நீர் காய்கள் நிறைய சாப்பிடுங்க.


குடிக்கும் தண்ணீரையே எப்படி மூலிகை தண்ணீராக மாற்றி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்


மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல்வலி , வாயுதொல்லை, அஜீரணம், வாந்தி, மயக்கம், தசை வலி, வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சி யடையவும் செய்கிறது.


நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன் படுத்தி கொள்ளலாம். வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது.


🔹தேவையான மூலிகை பொருட்கள்:


ஜாதிகாய்,

ஏலக்காய்,

லவங்கம் (கிராம்பு),

வெட்டிவேர்,சுத்தமான வெள்ளை துணி,

சுத்தமான குடி நீர் -1 லிட்டர்.


🔸தயாரிக்கும் முறை:


ஒரு ஜாதிக்காயில் எட்டில் 

ஒரு பங்கு மட்டும் அதாவது 0.5 கிராம் (ஜாதிக்காயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்), 


நசுக்கிய ஏலக்காய் எண்ணிக்கை - 2 ,


 லவங்கம் (கிராம்பு) 2 மட்டும், 


வெட்டி வேர் 1 கிராம் 


இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி  கொள்ளவும்.


பிறகு, ஒரு லிட்டர் குடி நீரை பாத்திரத்தில் எடுத்து (புதிய மண் பானையாக இருந்தால் மிகவும் நன்று) அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு விடவும்.


மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீரை ஐந்து லிட்டர் தண்ணிரில் கலந்து கொள்ளவும் (தங்களின் சுவைக்கு ஏற்றது போல் நீரின் அளவை மற்றிக் கொள்ளவும்). இந்த நீரை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


வீட்டில் உள்ள நீரை மட்டும் பயன்படுத்தவும். பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்படும் குடி நீர் நீண்ட நாட்கள் கெட்டுபோகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கபட்டிருக்கலாம் இது மூலிகை தன்மையை கெடுத்து விடும். ஐந்து லிட்டர் மூலிகை குடி நீர் தயார் செய்ய 5 ரூபாய் கூட தேவைப்படாது.


நம்ம வீட்ல உள்ளத படம்பிடிச்சு போட்டிருக்கேன் நீங்களும் முயற்சி செய்து  பாருங்க.

ஆரோக்கியம் நம்கையில்🌿🙏

Popular posts from this blog

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

Part 1-A New Floods Chapter 21 The Rustling Curtain || "Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA