பஞ்சபூத ஆற்றல் universal energy

 நம் உடல் பஞ்ச பூத சக்தியை அடக்கியுள்ள ஒரு அற்புத அமைப்பு, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு காற்று, ஒவ்வொரு செயல்பாடும் பஞ்சபூத சக்தியின் வெளிப்பாடு, இவை விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் கூட பொருந்தும், நம் உடலில் உள்ள 5 இராஜ உறுப்புகளின் ( கல்லீரல், இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ) அற்புத செயல்பாடுகள் பஞ்சபூத சக்திகளை கொண்டே செயல்படுகிறது, உடலில் பஞ்சபூத சக்திகளின் ஆற்றல் குறையும் போது உடல் வலிகளையும், சோர்வையும் உணர்கிறது, ஒவ்வொரு வலியின் தன்மையும் நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் சம்மந்தப்பட்டது, ஒவ்வொரு சக்தியும் கூடும்போதும் குறையும்போதும் நமக்கு வலிகளாக, நோய்களாக உணரமுடிகிறது, இவற்றை உடல் தானாக சரிசெய்துகொள்ளமுடியும், உதாரணமாக குழந்தைகளுக்கு காதுகுத்தும் ஓட்டை எப்படி மறைகிறது, மேலும் வயிற்றுள்ள கருவிற்கு யாரும் உள்ளே சென்று கையும் காலும் வைப்பதில்லை, அன்றைய சூழ்நிலையில் மருத்துவரிடம் அதிகம் சென்றதில்லை, ஆனா இன்று நிலைமை.... காலையில் வலி வந்தா மாலைக்குள் சரியாகிவிடவேண்டும், no time ....மாத்திரை கொண்டு தடுத்து நிறுத்தும் நோய்கள் மீண்டும் பல மடங்காக வரும்போது மனமும் உடலும் சேர்ந்தே சிதைகிறது......


உதாரணமா....தலைவலிக்கு மருத்துவரிடம் செல்கிறோம்...மருத்துவர் கேட்கும் கேள்விகள்


* இப்ப தலைவலிக்குதா

* எத்தனை நாளா

* அடிக்கடி வருமா

* வாரம் எத்தனை நாள் வரும்

* எவ்வளவு நேரம் இருக்கும்

* என்ன சாப்டீங்க....சரி இந்த மாத்திரை சாப்பிடுங்க, சரியாகலனா மறுபடியும் வாங்க மாத்திரை மாற்றி தரேன்....இதே கேள்விகள் கொஞ்சநேரம் அமைதியா அமர்ந்து  நம்மையே கேட்டுபார்த்தா தலைவலிக்கு விடை கிடைக்கும், ......


கடற்கரை உதாரணம் ஏன்.....5 சக்திகளும் சேர்ந்து இருக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நம் உடலுக்கும் பொருந்தும் .....கடற்கரையில் ஒரு சக்தி இல்லையென்றாலும் ஆனந்தமில்லை.....அதேதான் நம் உடலிலும்.....


உடல் சொல்லும் அறிகுறிகளை மெல்ல அறிவோம், கல்லீரலில் பிரச்சனை என்றால் கண் மஞ்சளாகும்..... அதே சக்திதான் கீழாநெல்லியையும் கொடுத்திருக்கிறது, கல்லீரலை சரிசெய்ய,.....மழை காலத்தில் காற்று ஈரபதத்தால்  சுவாச பிரச்சனை....அதே சக்திதான் நுரையீரலை சரிசெய்ய குப்பைமேனியை கொடுத்துள்ளது ( மழைகாலத்தில் மட்டுமே கிடைப்பது இதன் சிறப்பு ).....


உடல் மொழி அறிந்து, உடலில் பஞ்சபூதசக்திகளின் ஏற்ற இறக்கங்களை அறிந்து, சமன்படுத்த மருந்து மாத்திரைகளை நாடாமல், நம்மை நாமே குணபடுத்தும் ஆற்றல் அறிவோம்....உடல் நலம் காப்போம்.....நன்றி 🙏


Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan