இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம்

8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும், 


அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும், 


எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு )....


இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள்


முடக்குவாதம்

மூட்டுவலி

நெஞ்செறிச்சல்

கட்டிகள் நீங்கும்

குடல் அலர்ஜி

அல்சர்


இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்...



இந்த கழிவுநீக்க பயிற்சியை அனைவரும் ( விருப்பம் உள்ளவர்கள் ) நாளை செய்யலாம்... அனைவரும் உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் பதிவு செய்யலாம், நன்றி 🙏

இந்த 30 நாள் பயிற்சிகள் அனைத்தும் நீங்க வெளியில் போய் படிச்சா 35,000 ஆகும், இதில் மண்குளியல் தனியா 1000 ரூபாய், வாழைஇலைகுளியல் 1000, மூக்குகழுவுதல், கண் கழுவுதல், எனிமா 1000 நாம அங்கேயே செய்துபார்க்கனுமுனு சொன்னா 1000 , பார்க்கமட்டும் 35,000.....


இங்க உங்களுக்கு இலவசமா கிடைக்கிறது, காரணம் நீங்க செய்துபார்த்து தெரிஞ்சிகிட்டா, ஒருத்தர் 1000 பேரை மாற்றலாம், 


இது மருந்தில்லா செலவில்லா மருத்துவம், அன்றாட வாழ்க்கை மாறினால் மருத்துவ செலவு அவசியமில்லை, புதுபுது நோய்களுக்கு என்றுமே பயப்படவேண்டாம்....


உங்க செளகர்யம் எப்படி னு பார்துக்கோங்க......


Comments

  1. அனைவருக்கும் வணக்கம் 🙏

    அனைவரும் சிறப்பாக செய்துள்ளீர்கள், இந்த இரைப்பை கழிவு நீக்கம் மூலம் உடலில் பித்ததன்மை ( உடல் சூடு ) குறைந்து, உடல் சூடு குறையும், மேலும் உடலில் அமிலத்தன்மை அதிகமாவதால் பல்வேறு நோய்கள் வருகிறது, கழிவுநீக்கம் மூலம் காரத்தன்மை ( alkalinity ) அதிகமாகும், எனவே அதுசார்ந்த நோய்களை உடல் தன்னைத்தானே குணபடுத்தும், தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாள் செய்தால் உடல் எடை குறையும் ஜீரணசக்தி அதிகரிக்கும் உடலில் ஏற்பட்டுள்ள கட்டிகள் மறையும், முடக்குவாதம், குடல் அலர்ஜி, நெஞ்செரிச்சல், மூட்டுவலி, போன்ற பல நோய்கள் சரியாகும்.....

    நானும் எனது குடும்பத்தினரும் இப்பொழுதுதான் செய்துமுடித்தோம், அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

    ReplyDelete
  2. இந்த தண்ணி குடிப்பதற்கு முன் ஏதாவது சாப்பிட்டிருந்தாலும் வாந்திவராது சாதாரண தண்ணி உட்பட, இரண்டாவது எழுந்து நீண்ட நேரமாகிவிட்டாலும் வாந்திவராது, கழிவு நீக்கம் போய் ஜீரணஉறுப்பின் வேலை ஆரம்பிச்சுடும், நீங்க குடிச்ச தண்ணீ ஜீரணமாகும், அதனால் மலகுடல் வழியா வரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan