மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!

 தென்கச்சி கோ சாமிநாதன்


நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.

.

ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

.

“ஆமாங்க.’

.

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’

.

“சொல்லுங்க டாக்டர்.’

.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

.

“எங்கே டாக்டர்?’

.

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

.

“பெரிய விபத்தா டாக்டர்?’

.

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டி இருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

.

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.

.

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்து இருக்கறவங்களுக்கு   எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா தான்  அவங்களையெல்லாம் காப்பாத்திடலாம்.’

.

“சரி.’

.

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்களை எல்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

.

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

.

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

.

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

.

“ஹலோ!’

.

“”சார்… மறுபடியும்    ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

.

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

.

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட்  ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

.

“என்ன ஆச்சு டாக்டர்?’

.

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’

.

மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக்     கொள்கிறோம்.

.

மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். மொழி ஒரு தடையாக இல்லை.

.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

இப்படி எல்லா ஊடகங்களும் இருந்திருந்தால் கொரானா இவ்வளவு வேகமாக பரவி இருக்காது. உயிரிழப்பும் இவ்வளவு ஏற்பட்டு இருக்காது. மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!


Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan