வீட்டில் விளைவித்த காய்கறி (home made organic) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை
வீட்டில் விளைவித்த காய்கறிகளை 2010லிருந்து பயன்படுத்தி வந்ததால் இரத்த அழுத்தத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்.
16 மாத்திரையில் ஆரம்பித்து 3 மாத்திரை ஆனது. கடந்த நான்கு வருடங்களாக மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளவதில்லை. காரணம் மாத்திரைகள் எடுத்தும் தீராத சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டில் விளைந்த கீரைகள் தீர்த்து வைத்தது.
அனுதினமும் கீரைகள் மாற்றி மாற்றி கலாவாங் கீரை சூப் ஒரு கப் வீட்டிற்கு பணிக்கு வரும் அம்மையார் முதல் அனைவரும் பருகி வருகிறோம்.
பயன்படுத்தி ஒரு வாரத்தில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன் என்று கூறினார் பணி மகள்.
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.
Comments
Post a Comment