NEET Coching - NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்?

 NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்?


லட்சங்களை செலுத்தும்  முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.


1.அனைத்து பயிற்சி மையங்களும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் Physics Book என்னவெனில் Concepts of Physics by H.C.Verma இதன் விலை 600 மட்டுமே.


2.  BIOLOGY பாடத்திற்கு NCERT மற்றும் SCERT உங்களது புத்தகத்தை படித்தால் மட்டுமே  போதுமானது.


3. MATHS பாடப்பிரிவிற்கு உங்களது பாடப்புத்தகங்ளோடு  Maths by R.D.Sharma வைத்துக் கொள்ளுங்கள். இதன் விலை அதிகபட்சமாக 1500 ரூபாய்.


4.   CHEMISTRY பாடப்பகுதிகளை உங்களது  NCERT மற்றும் SCERT புத்தகங்களை கொண்டே படிக்கலாம்.


5. 40 ஆண்டு வினா வங்கி புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நீங்கள் படித்ததில் உள்ள வினாக்களை விடையளித்து பாருங்கள். இதன் விலை அதிகபட்சம் 700 ரூபாய் மட்டுமே.



இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவெனில் பல பயிற்சி மையங்கள் தங்களது பெயரில் புத்தகங்களை ARIHANT PUBLICATIONS போன்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களே தயாரித்தது போன்ற முன்பக்க அட்டையை அச்சடித்து மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்றுகின்றனர். அதன் மொத்த விலையே 2000 ரூபாய் மட்டுமே அதனை செலுத்தி நீங்களே பெற்றுக் கொள்ளலாம்.


ஆக வெறும் 3000 முதல் 5000 ரூபாய் செலவில் எளிதாக NEET மற்றும் JEE போன்ற தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்பதே உண்மை. இதனைப் பல பள்ளிகளும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே நமது லட்சியமாக கொண்டு ஏழைமாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்


உங்களது பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு நீங்கள்  படித்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.



மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பிறருக்கும் பகிர்ந்து மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்.

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan