Posts

Showing posts from July, 2021

இன்றைய பயிற்சி கண்களுக்கானது eye practice

 அனைவருக்கும் வணக்கம் 🙏 இன்றைய பயிற்சி கண்களுக்கானது, எந்த செலவும் இல்லாதது....நம் கைகளை மட்டும் உபயோகித்தால் போதுமானது....இன்று ஒரு நாள் செய்ங்க.... செய்தவங்க உங்கள் அனுபவங்களை சொல்லி மாலை பயன் என்ன னு கேளுங்க சொல்கிறேன்.... * இரண்டு மணிநேரத்திற்கொருமுறை, கண்களை மூடி,  இரண்டு கைகளையும் குவித்து கண்ணின் மேல் வைத்து....60 எண்ணிக்கை எண்ணவும்..... * இரண்டு மணநேரத்திற்கொரு முறை என்பது இன்று முழுக்க 6 முறை வரும்.... அனைவருக்கும் வணக்கம் 🙏 காலையில் நாம் செய்த கண் பயிற்சிக்கான பலன்கள் * நாம் செய்தது கண்களுக்கான யோகா பயிற்சி... ( palming yoga )... * உள்ளங்கையில் கண்ணை அழுத்தாமல் மறைத்து, வலதுகையை வலது கண்ணிலும், இடது கையை இடது கண்ணிலும்  வைத்து  2 நிமிடம் இருக்கவேண்டும் ( 120 நொடிகள் )..... பயன்கள் * கண்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெறும் * கண் நீர் அழுத்த நோய் ( glaucoma )  சரியாகும் * கண்புரை நோய் சரியாகும் ஒரு நாளைக்கு 6 முறை செய்யவேண்டும் எனதனுபவம் கண்களை மூடி திறக்கும் போது ஒரு மலர்ச்சி, புத்துணர்ச்சி கிடைத்தது

Spoon feeding எப்படி சாப்பிடனும் என்பதற்கான பதிவு

Image
 நன்றாக மென்று முழுங்கும் வரை,   கையில் அடுத்த உணவை எடுத்து வாயில் வைக்க கூடாது என்பதற்கான பதிவு ..... * விருப்பமுள்ள அனைவரும் செய்ங்க... ஆரோக்கியமா 100 ஆண்டுகள் வாழ நினைப்பவர்கள் செய்யும் எளிமையான,  எந்த வித செலவும் இல்லாத செயல் இது, நாமும் செய்வோம்....ஆரோக்கியமாக வாழ்வோம், 💐 பதிவு 👇

திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

Image
  பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென் சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "...

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 7 ம் நாளுக்கான உணவு காலை அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு மதியம் அவல் புட்டு சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் .. மாலை எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது) இரவு  பழங்கள் தேங்காயின் பயன்கள் * உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும் * அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும் * உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது * கெட்ட கொழுப்பை அகற்றும் * இரத்தம் சுத்தமாகும் * உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும் * பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்.... 11 மணிக்கு Detox water கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும் மதியம் வெண்பூசணி அவல் சாதம் துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்.... மாலை அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும் இரவு பழங்கள் * வெண்பூசணி குடல் புண் ஆற்றும் * எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும் * வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும் * உடல் குளிர்ச்சியாகும் * வேர்கடலை களைப்பு நீக்கும் * detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும் * அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.

படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு 1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.  மாட்டுவண்டி எங்க தாத்தா ??? மாடு இல்லையே பா..!!  2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே. ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ? மாடு இல்லையே பா..!!  3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.  மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ? மாடு இல்லையே பா..!!  4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது. மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant  என்ன ஆயிற்று ?  மாடு இல்லையே பா..!!  5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -  மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ?? மாடு இல்லையே பா..!!  ********* உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய ...

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும் 11 மணிக்கு  Detox water கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும் மதியம் அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும் மாலை இரண்டு துண்டு வெண்பூசணி  இரவு  7 மணிக்குள் இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ... பழங்கள்.... மதியம்

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏 காலை வெண்பூசணி ஜூஸ் வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்.... எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும் Detox water 11 am புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்) மதியம் தேங்காய் பால் + அவல் கலவை மாலை கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும் இரவு  பழங்கள் * செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்  *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏 3 ம் நாளுக்கான உணவு.... காலை கொத்தவரங்காய் ஜூஸ் கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும் 11 மணிக்கு Detox water கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும் மதியம் நவரத்னா அவல் கலவை வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும் மாலை வாழைப்பழ பேடா வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும் இரவு  பழங்கள் கொத்தவரங்காய் *கொத்தவரங்காய் நரம்பு பலப்படும் * சிரங்கு, வேர்கூரு குணமாகும் * கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும் * பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும் * நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும் * சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

Image
 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை * கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது.  * அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை. Mr. Balaraman Maneri Mrs.V.Priya Rajnarayanan  பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் https://youtu.be/bMtLZfTHzPc

2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏 கத்தரிக்காய் ஜூஸ் கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )... கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்..... மதியம்  தக்காளி அவல் சாதம்.... தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை..... மாலை (5 மணிக்குள்) Detox water... கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1.... 👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்.... இரவு கொய்யாபழம் * கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்.... * தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும் Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இரண்டு நாள் இயற்கைவாழ்வியல் பயணம் Two days natural way of life

அனைவருக்கும் வணக்கம் 🙏 *அதிகாலை அலாரம் இல்லாமல் கண்விழிப்பு * 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது * தடாசணம் * காலைகடன் * மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்குதல் * பித்த நீர் கழிவு நீக்கம் * கண் கழுவுதல் * தலைக்குளியல் * உடல் பயிற்சிகள் * பஞ்சபூத சக்தி வணக்கம் * சூரியனை வணங்குதல் * உமிழ்நீரோடு உணவை மென்று முழுங்குதல் * கண்பயிற்சிகள் * இரவு தூங்கும்முன் பயிற்சி ( இவைகள் தினமும் தொடரவும் 👆 ) மேலும் .... * வாரம் இருமுறை எண்ணெய் குளியல் * மாதம் ஒரு முறை இரைப்பை சுத்தம் * வாரம் 3 முறை மூக்கு கழுவுதல் * மாதம் ஒரு முறை நீர்தாரா * 3 மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம் * 6 மாதத்திற்கு ஒரு முறை மண் குளியல் * வாரம் ஒரு முறை 16 மணிநேர விரதம் இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு தொடர்ந்து செய்ங்க, தொடர்ந்து செய்யும் போது நீங்க ஒரு பயிற்சியாளராக ஆகமுடியும்,  நாம் உணர்ந்து செய்யும்போதுதான் மற்றவர்களுக்கு சொல்லமுடியும்,  மருந்தில்லா, செலவில்லா எளிமையான மருத்துவ முறை இது, கழிவுகளின் தேக்கம் தான் நோய், அவைகளை வெளியேற்ற இவ்வளவு வழி நம் முன்னோர் சொல்லிவைச்சிருக்காங்க, அதை தொடர்ந்து செய்வோம் பலன்பெ...

மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.       மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும்.  மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத...

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும் வாழைக்காய் பசும்பொரியல் வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்..... மதியம் அவல் உணவு அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும் மாலை பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு ).... இரவு 7 மணிக்குள் பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று முக்கிய குறிப்புகள் * இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும் * உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது,  * வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடை...

வாழைக்காய் அப்படியே சாப்பிட்டால் வாய்வு ஏற்பட வாய்ப்பு இருக்குங்களா? Raw banana healthy vegetables

 வாய்வு ஏற்பட வாய்ப்பு  இல்லை, சாப்பிடலாம்.. பச்சையாக வாழைகாய் சாப்பிடுவதற்கு பிஞ்சு காயை எடுத்துக்கொள்ள வேண்டும், கிடைக்காத சமயம் விளைந்த காயை பயன்படுத்துங்கள்.  சிறு துண்டுகளாக வெட்டிய காயை நல்ல தேனில் ஊரவைத்து  , நல்ல பனை வல்லத்தில் பாகு காய்சி ஊரவைத்த வைத்து , மிளகு சீரகம் பொடி தூவி எலுமிச்சை சாறு சிறு துளிகள்  விட்டு  இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி சாப்பிட்டு வரலாம்.  அல்லது தோலுடன்  வாழைக்காய்  , தோலுடன் எலுமிச்சை,  சிறு துண்டு இஞ்சி , 10 மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பருகலாம். சிறு காய்கறிகள் இருந்தால் இரண்டு நபர்கள் , பெரிய காய் மூன்று நபர்கள் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்.  அதிலும் நாட்டு காய் கிடைத்தால் பலன் அதிகம்.கிடைக்காத பட்சத்தில் மற்றவற்றை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கு ஊசி, மாத்திரை ,இரசாயன உரங்கள் , மருந்து தெளித்தல் போன்றவை அதிகமாக பயன்படுத்துவதால்  கல் உப்பு , மஞ்சள் தண்ணீர் கலவையில் நன்கு ஊரவைத்த கழுவி பயன்படுத்த வேண்டும்.

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Image
 மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA மற்ற எந்த வகையான உணவுகளை காட்டிலும் பழங்களில் அதிக அளவு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.  அதில் நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் மூக்குச்சளிப்பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை #நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது மூக்குச்சளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.  நறுவல்லிபழம்பயன்கள் 😊🌿🙏😋🙏🌿🙏 ஆண்மைகுறைபாடு இக்காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன மூக்கு சளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத் தன்மை குறைபாட்டை நீக்கி,ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது. உடல் சூடு நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங் களில் பலருக்கும் உ...

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8

Image
 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 8☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 தேதி:  04/07/2021    நேரம்:3:30 PM to 5:00 PM Topic: ஆடிப்பட்டம் தேடி விதை  கேள்வி பதில்கள் பகுதி - 2 இந்த நிகழ்வில் விதைப்புக்கு தயாராக இருக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வீட்டு தோட்டம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் Mr. Balaraman Maneri Mrs.V.Priya Rajnarayanan  பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian-9500321318 Mrs. Akila Kunalan-9962583057 ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5.00PM முடிந்து விடும். seedsisland Team is inviting you to a scheduled Meeting

நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்! Fruits

 நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்! அரசும் மீடியாவும் பிரபலங்களும்...மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்னு சொல்லுவாங்க...  ஆனா கனி தரும்னு மட்டும் சொல்லவே மாட்டாங்க. ஏன்? இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது. ஏன்?  எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்த சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு அந்த புளிய மரங்களை வெட்டிவிடும். விரிவாக்கத்திற்கு பின் வெத்து மரங்களையே நடும்.  அரசும் தொண்டு நிறுவனங்களும் வெத்து மர்மங்களை மட்டுமே நடும். Lock down னில் பல ஆயிரம் பேர் பல கிலோமீட்டர் ரோட்டில் பசியோடு நடந்து சென்றனர். அப்பொழுதும் கூட அந்த மக்கள் காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என சிந்திக்கவில்லை. எனக்கு தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை. நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முக்கிய உணவே பழம்தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. மா பலா நாவல் அத்தி கொய்யா.... எ...

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்  (நன்றி திரு நம்மாழ்வார் ஐயா)  பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:-  மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும் 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30...

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் vegetables to cure diseases Food is Medicine

 Kidney Failure : கத்திரிக்காய் Paralysis : கொத்தவரங்காய் Insomnia : புடலங்காய் Hernia : அரசாணிக்காய் Cholesterol : கோவைக்காய் Asthma : முருங்கைக்காய்  Diabetes : பீர்கங்காய் Arthritis : தேங்காய் Thyroid : எலுமிச்சை High BP : வெண்டைக்காய் Heart Failure : வாழைக்காய் Cancer : வெண்பூசணிக்காய் உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀* 💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும். 💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚 💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚 💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚 💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚 💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚 💎வாழை வாழ வைக்கும்💚 💎அவசர சோறு ஆபத்து💚 💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚 💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚 💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚 💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚 💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚 💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚 💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚 💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚 💎சித்தம் தெளிய வில்வம்💚 💎 சிறுநீர் கடுப்புக்கு ...

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏 நாளைய கழிவு நீக்கங்கள் காது கழிவு காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்.... வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏 பித்தநீர் கழிவு காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை,  பயன்கள் தலைவலி வாந்தி நெஞ்செரிச்சல் ஜீரணமின்மை வயிறுசம்மந்தமான நோய் நீக்கும் தலைக்கழிவு * முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும்  * மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான ந...

கண் கழிவு நீக்கும் முறை Eye cleaning technique

Image
 கண் கழிவு நீக்கும் முறை கண் குவலை வைச்சு நாளைக்கு இரு முறை காலை மாலை கண்கழுவலாம்..... பயன்கள் *கண்களில் உள்ள தூசிகள் நீக்கும் *அழுக்குகளை நீக்கும் * வெப்பம் குறைக்கும் *கண்ணுக்கு பிராண சக்தி கிடைக்கும் * கண்பார்வை தெளிவாகும் செய்யும் முறை மருந்தில்லா தண்ணீர் எடுத்துக்கோங்க, கண்குவலையில் ஊற்றி லேசா குனிந்து தண்ணீரில் கண் வைச்சு முழித்து பின் கண்களை மூடவும்.... கண்குவலை கிடைக்காதவங்க இரவே திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணி கட்டி வைச்சிடுங்க, காலையில் அந்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் முகத்தை வைத்து கண்களை திறந்து பார்க்கவும், பாத்திரத்தில் முகம் வைக்கும்போது நாக்கு வெளியே இருக்கனும்....( இந்த பயிற்சி காலை ஒரு முறை போதும்) நந்தியாவட்டை பூக்கள் இட்ட குளிரிந்த நீரும் கண் குவளையும்.... பயிற்சி இனிதே முடிந்தது... 1 கண் இடது வலது பார்க்கனும், இடது போகும்போது மூச்சை உள்ளே லேசா இழுத்து  வலது வரும் போது விடனும்..   2 மேலே கீழே பார்ப்பது ( மேலே போகும்போது மூச்சை எடுத்து கீழே வரும்போது விடனும் ) 3 வட்டம் போடுவது ( ஒருவட்டம் வரும்போது மூச்சை எடுத்...

ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் Activities for Day 3 and clarification on queries raised on first two days

 அனைவருக்கும் வணக்கம் 🙏 *நாளை( சனிகிழமை ) ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் ( சனிகிழமை, புதன்கிழமை ) * நாளை (சனிகிழமை ) பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் கடந்த இரண்டுநாள் பயிற்சியில் 55 நபர்கள் பங்கெடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வியலுக்கு வருவது கொஞ்சம் தயக்கமா இருக்கும், செய்துபார்துட்டா உங்க உடம்பு நீங்க சொல்றத கேட்கும்,  இந்த இரண்டுநாளில் குழுவில் வந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான பதில்கள்... * இரைப்பை கழிவு நீக்கம் ஒரு நாள் போதும்,   * ஒவ்வொரு உடலும் ஒரு மாதிரி இருக்கும், முதல்ல தெரிஞ்சிக்கோங்க, மாதம் ஒரு முறை செய்ங்க, அடுத்து வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம், தொண்டை மென்மையான பகுதி, யாராவது தொடர்ந்து 10 நாள் செய்யறதா இருந்தா, தனிபதிவில் எனக்கு தகவல் கொடுத்துடுங்க... * உப்பு தண்ணி குடிச்சதும் தானா வாந்தி வரும், வரலனா லேசா மேலண்ணம் தொட்டா போதும்னு சொன்னேன், ரொம்ப கைவிட்டு கஷ்டபடகூடாது, வரலனாலும் பரவாயில்லை, மலமா வந்துடும்... * இரைப்பை சுத்தம் செய்த அன்று எண்ணெய்குளியல் செய்ய கூடாது...ஏன் என்றால் இரைப்பை சுத்தம் செய்ததும் குடல், இரைப்பை சுத்தம்...

நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி!!! பெண்களுக்கு எண்ணெய்குளியல் !!! Nose cleaning for Men and Oil bathing tips for Female

Image
 இந்த பொருள் நாளை ஆண்களுக்கு, நாளை மறுநாள் பெண்களுக்கு தேவைப்படும் வாங்கிக்கோங்க, பெண்கள் எனிமா கேன் சேர்த்து வாங்கிக்கோங்க, இவை மூன்றும் சேர்ந்தே விற்கிறாங்க, 100 முதல் 150 இருக்கும்.....👇      இயற்கைவாழ்வியல் பொருட்கள் விற்கும் கடைகள், நாட்டுமருந்துகடை, ஆங்கில மருந்துகடைகளில் இவை மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... கிடைக்கலனா சிரம படாதீங்க... கிடைக்கும்போது செய்யலாம் ... அம்மி இயற்கை அங்காடி, காதிகிராப்ட் போன்ற கடைகளில் மூன்றும் சேர்ந்தே கிடைக்கும்... நாளை ஆண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம், 👇 மூக்குகழுவும் குவளை வைச்சி செய்யனும்,  நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தீரும்,  சைனஸ்,  மூக்கடைப்பு,  ஆஸ்துமா நெஞ்சுசளி வீசிங் சரியாகும் சாதாரண லேசான சூடு உள்ள தண்ணீரில் 4 கல் உப்பு போட்டு அந்த மூக்குகுழாய் மூலம் மூக்கில் விட்டு சுத்தப்படுத்தனும்....செய்முறை விளக்கம் 👇 இந்த பயிற்சி 👆 நாளை ஆண்கள் செய்ங்க, இந்தபயிற்சியை நமக்கு செய்து காண்பிப்பவர் சகோதரி லலிதா சிவசங்கர், இயற்கைமருத்துவர். அனைவருக்கும் வணக்கம் 🙏 நாளை பெண்களுக்கு....  எண்ணெய்குளியல் ( வ...