ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம் Activities for Day 3 and clarification on queries raised on first two days
அனைவருக்கும் வணக்கம் 🙏
*நாளை( சனிகிழமை ) ஆண்கள் எண்ணெய் குளியல் செய்யலாம் ( சனிகிழமை, புதன்கிழமை )
* நாளை (சனிகிழமை ) பெண்கள் மூக்கு கழுவும் பயிற்சி செய்யலாம்
கடந்த இரண்டுநாள் பயிற்சியில் 55 நபர்கள் பங்கெடுத்திருக்கீங்க, மிகவும் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வியலுக்கு வருவது கொஞ்சம் தயக்கமா இருக்கும், செய்துபார்துட்டா உங்க உடம்பு நீங்க சொல்றத கேட்கும்,
இந்த இரண்டுநாளில் குழுவில் வந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான பதில்கள்...
* இரைப்பை கழிவு நீக்கம் ஒரு நாள் போதும்,
* ஒவ்வொரு உடலும் ஒரு மாதிரி இருக்கும், முதல்ல தெரிஞ்சிக்கோங்க, மாதம் ஒரு முறை செய்ங்க, அடுத்து வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம், தொண்டை மென்மையான பகுதி, யாராவது தொடர்ந்து 10 நாள் செய்யறதா இருந்தா, தனிபதிவில் எனக்கு தகவல் கொடுத்துடுங்க...
* உப்பு தண்ணி குடிச்சதும் தானா வாந்தி வரும், வரலனா லேசா மேலண்ணம் தொட்டா போதும்னு சொன்னேன், ரொம்ப கைவிட்டு கஷ்டபடகூடாது, வரலனாலும் பரவாயில்லை, மலமா வந்துடும்...
* இரைப்பை சுத்தம் செய்த அன்று எண்ணெய்குளியல் செய்ய கூடாது...ஏன் என்றால் இரைப்பை சுத்தம் செய்ததும் குடல், இரைப்பை சுத்தம் அடைந்து குளிர்ச்சியா இருக்கும்......
பொதுவா பேதி ஆகும்போது குளிக்ககூடாது,
* எண்ணெய் குளியல் காலை 6 மணிக்கு மேல் தான் செய்யனும்...
Comments
Post a Comment