மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

 மூக்குசளி பழம் (அல்லது)

நறுவல்லிபழம்

CARDIA DOCHOTOMA







மற்ற எந்த வகையான உணவுகளை காட்டிலும் பழங்களில் அதிக அளவு உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. 


அதில் நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் மூக்குச்சளிப்பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை #நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது மூக்குச்சளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 நறுவல்லிபழம்பயன்கள்

😊🌿🙏😋🙏🌿🙏


ஆண்மைகுறைபாடு இக்காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன


மூக்கு சளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத் தன்மை குறைபாட்டை நீக்கி,ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.


உடல் சூடு நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங் களில் பலருக்கும் உடல் வெகு சீக்கிரத்தில் உடல் உஷ்ணமடைந்து தலைவலி, உடல் சோர்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமை யான கோடை காலங்களில் மூக்கு சளி பழங் களை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடற்சோர்வு நீங்கி உடலுக்கும், மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. 


குடற்புழுக்கள் சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் உற்பத்தி யாகி, அவர்களின் உடல் நலத்தை பாதித்து, உடலளவிலும் மனதள விலும் சோர்வடையச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்தாக மூக்குச் சளிப் பழம் இருக்கிறது. 


இதய ஓட்டையை சரி செய்யும்  ஆற்றல் உடையது.தோல் நோய்கள், நீர்ச் சுருக்கை குணமாக்கும் சுவாச கோளாறுகள் சரியாகும்.


இந்த பழங்களை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுத்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து மலத்தின் வழியாக உடலை விட்டு அவை வெளியேறும். உடல் எடை கூட நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி நறுவிழி பழங்களை சாப்பிட வேண்டும். 


இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி மூக்கு சளி பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய்எதிர்ப்புதிறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமி களை எதிர்த்து போராட முடிகிறது. 


எனவே அனைத்து வயதினரும் நறுவிலி பழங்களை அடிக்கடி சாப்பிடுவது பயன்தரும்.


பழங்கள் தேவைக்கு

🌿🙏👍🌳🌳🌳🌳🌳

ருதம்பராயோகாமையம்

Comments

Post a Comment

Popular posts from this blog

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan