Posts

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1 எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? கேள்வி 2 வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்?  கேள்வி  3 மண்புழு உரம் ஏன் ? Answers 1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்... மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது 1&2 , மண் புழு  3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்... * பதில் 1= மண்புழு * பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து...

ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன

 நாட்டு பசு மாடே போதும்!‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல… அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்… காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க… சடசடவென பொழிந்தார் பாலேக்கர் ”ரசாயன விவசாயம் வேண்டாம்… இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள் சிலர். ‘யூரியா போடவேண்டாம்… மண்புழு உரம் போடுங்கள்’, ‘பொட்டாஷ் தேவையில்லை… ஆர்கானிக் உரம் போதும்’, ‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்… பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள். ‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல… காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிட...

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் )....... திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....

 வணக்கம் 6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் ).......வருகின்ற திங்கள் முதல் சனிக்கிழமை வரை..... இந்த Task செய்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள்..... * முகம் பொலிவுபெறும் * உடல் சூடு குறையும் * முடி உதிர்வது கட்டுப்படும் * கண்கள் பளிச்சிடும் * என்றும் இளமை * செய்யும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வு * தோல் பளபளப்பாகி அழகு பெறும் * பெண்களின் கர்பப்பை குளிரும், சூடு குறைவதால் கரு உருவாவது எளிதாகும் * பற்கள் பலம்பெறும் * எலும்புகள் வலுப்பெறும் * நரம்பு மண்டலம் பலம் பெற்று உறுதியாகும் * சுவாசம் சீராகும், எண்ணம் தெளிவாகும் * குடல் புண், வாய்புண் தீரும் * குடல் சுத்தமாகும், அதனால் இரத்தம் சுத்தமாகி  ....சகல நோய்களும் தீரும்..... விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம் , கட்டாயாமில்லை, ..... ஆனால் செய்தவர்களின் அனுபவபதிவு அவசியம் தேவை....750 நண்பர்களில் ஒருவர் அனுபவபதிவு செய்தாலும் மகிழ்வேன், இந்த அனுபவ பதிவு மற்றவர்களுக்கு நல்ல உணவுகளை நோக்கி செல்லவும் நோயின்றி வாழவும் வழிசெய்யும்....நன்றி 🙏  சனிக்கிழமை தேவையான பொருட்கள் பதிவு வரும் 💐🤝 வணக்கம் 6 days breakfast Task தேவையான...

மூலிகைதண்ணீர் Mooligai water Ayurvedic drinking water | Aarokya Vazhkkai

 மூலிகைதண்ணீர் கோடை காலம் வந்து விட்டது.வெப்ப நோய் களிடம் இருந்து உங்களை காக்க, உடல் குளிர்ச்சி அடையை இன்னும் பலவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நிறைய தண்ணி குடிங்க, நீர் காய்கள் நிறைய சாப்பிடுங்க. குடிக்கும் தண்ணீரையே எப்படி மூலிகை தண்ணீராக மாற்றி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல்வலி , வாயுதொல்லை, அஜீரணம், வாந்தி, மயக்கம், தசை வலி, வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சி யடையவும் செய்கிறது. நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன் படுத்தி கொள்ளலாம். வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது. 🔹தேவையான மூலிகை பொருட்கள்: ஜாதிகாய், ஏலக்காய், லவங்கம் (கிராம்பு), வெட்டிவேர்,சுத்தமான வெள்ளை துணி, சுத்தமான குடி நீர் -1 லிட்டர். 🔸தயாரிக்கும் முறை: ஒரு ஜாதிக்காயில் எ...

குப்பையாகிப் போன நம் உடலை பொன்னாக மாற்றும் மூலிகை Kuppaimeni ( Acalypha indica ) ...

Image
 #குப்பையாகிப்போனநம்உடலை  #பொன்னாகமாற்றும்மூலிகை... 🙏#குப்பைமேனிகீரை*🌿 Kuppaimeni ( Acalypha indica )  மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி மீது அதிகம் விருப்பம் என்பதால், இதற்கு #பூனைவணங்கி’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து. குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும். குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும். குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால்,...

|| நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....|| Know your body health

 || நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....|| முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்... அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்... ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்  உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.  இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.  ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.  உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அ...

Snake Warning எச்சரிக்கைப்பதிவு Safety tips for summer

 #எச்சரிக்கைப்பதிவு..!! அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..! 1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்  திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். 2. மாலை வேளைகளில்  வீட்டு முன், பின் கதவுகளை  திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள்  நுழையலாம். 3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். 4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம். 5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன. 6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும். 7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச...