மன அழுத்தத்தை குறைக்க 9 எளிய வழிகள் Remedies for Stress mental pressure relief
1. Have a laugh ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2. Spend time with your pet நம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3. Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4. Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5. Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சி...