Posts

Showing posts from December, 2020

மஞ்சள் பூசணிக்காய் துருவல்

Image
 இன்று மதிய உணவு ஒரு புதிய முயற்சி...  சுவை பிரமாதம்😋😋😋 மஞ்சள் பூசணிக்காய் துருவல்  வெள்ளை உள்ளி (நறுக்கியது) ஊற வைத்த பச்சை வேர்க்கடலை மெக்சிகன் கொரியான்டர் ( என்னிடம் கொத்தமல்லி இல்லை) புதினா எலுமிச்சை சாறு மிளகு  கல் உப்பு #அடுப்பில்லா_சமையல்

மரணம் வரும் வரை ஆரோக்கியமாக வாழ..... health tips

 மரணம் வரும் வரை ஆரோக்கியமாக வாழ..... 1. உண்ணும்பொழுது உதட்டை பிரிக்காமல் மென்று கூழாக்கி உண்பது..  2. உணவை 32  மென்று விழுங்குவது சிறந்தது.. 3. மென்று உண்பதால் பசியின் அளவு அறிந்து உணவின் அளவும் குறையும்... 4. உமிழ்நீர் கலந்த உணவின் காரத்தன்மை அதிகம், அதனால் உணவே மருந்தாகும்.... 5. உணவு செரிமானம் குறைதலே அனைத்து நோய்களுக்கும் காரணம்...தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி, நீரிழிவு முதல் புற்றுநோய் வரை.... 6. வாழைப்பழம் என்றாலும் நன்கு மென்று கூழாக்கி விழுங்காவிட்டால் குடலுக்குள் சென்று செறிக்காத கழிவுகள் மலக்கழிவாகி விஷமாகும்... 7. காலை 5 மணிமுதல் 7 மணி உடல் கழிவுகள் வெளியேறும் நேரம், பெருங்குடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேற சக்தி கிடைக்கும் நேரம் காலை 5 மணி, அதிகாலை கண்விழிப்பது உடல்கழிவுகளை வெளியேற்றி உடலின் மொத்த ஆரோக்கியமும் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற உண்மை.....

நரிபயறு சட்னி naripayiru chatny

Image
  நரிபயறு சட்னி...... எலும்பு, நரம்புகளுக்கு பலம் கொடுக்கும், நார்சத்து, புரதம், கால்சியம், இரும்புசத்து அதிகம் உள்ள பயிர், தற்போது அரிதாகி வரும் பாரம்பரிய பயிர்களில் இதுவும், இந்தப்பயிர் வளர குறைந்தளவு நீர் போதும், வறட்சியான நிலங்களிலும் செழித்து வளரும் தரைகொடிவகை....மானாவாரி நிலங்களில் பயிரிடலாம்......இந்த பயிர் விளைவித்து கொடுத்தவர் அகிலா குணாளன்  ஒரு கை நரிப்பயறு, ஒரு சில் தேங்காய், மிளகாய் வத்தல்(தேவையைபொருத்து), பூண்டு 4 பல், தக்காளி 1, பெருங்காயம் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு, நரிபயறை முதலில் வறுத்து எடுத்துட்டு, மற்ற அனைத்தையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கவும்,

கேழ்வரகு சூப் Kelvaragu soup

Image
கேழ்வரகு சூப்..... குளிர்கால உணவுகளில் மிக முக்கியமான உணவு கேழ்வரகு.....கூழ், ரொட்டி, சூப் செய்யலாம்......இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு பலம் கொடுக்கும், மூட்டுகள் பலமாகிறது, விட்டமின் B சத்து இதில் உள்ளது, குழந்தைகள் முதியவர்களுக்கு தொடர்ந்து கொடுக்கலாம், மாதவிடாய் காலங்களில் வரும் வலி பலகீனம் சரியாகும், மெனோபாஸ் நேரத்தில் பலம் கொடுக்கும், இரத்த ஓட்டம் சீராக்கி சமநிலையில் வைக்கும், .....சிறுதானிய உணவுகளை உண்போம் பலம் பெறுவோம்.....  ஒரு ஸ்பூன் கேழ்வரகு கொஞ்ச நேரம் ஊறவைச்சிட்டு ( குட்டி உரலில் இடிச்சு எடுக்கனும்), 4 சின்னவெங்காயம் , பூண்டு 4 பல் தட்டி வைச்சிக்கனும், ஒரு சிறிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் மிளகுதூள்..... பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, தட்டிவைத்த வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து, உப்பு மிளகு மஞ்சள் தூள் சேர்த்து , இடிச்சி வைச்ச கேழ்வரகு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதித்து சிறிது நேரம் வெந்ததும் இறக்கி வைத்து குடிக்கலாம்....

சிவப்பு பூங்கார் அரிசி இட்லி

Image
சிவப்பு பூங்கார் இட்லி   4 கப் சிவப்பு பூங்கார் அரிசி ( 4 மணி நேரம் ஊற வைக்கவும் ) 1 கப் உளுந்து ( 2 மணி நேரம் ஊற வைக்கவும் ) 1/2 கப் வெள்ளை அவல் ( 10 நிமிடம ஊற வைக்கவும் ) உளுந்து தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் சிவப்பு பூங்கார் அரிசி மற்றும் வெள்ளை அவல் ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் ஒன்றாக கலந்து 8 மணி நேரத்திற்கு பிறகு இட்லி வேக வைக்கவும்

இன்று உலர் பழங்கள் விதைகள் உணவுகள், குளிர்கால உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமான சூடுதரும் உணவுகளில் சிறந்த உணவு இவைகள்

Image
  மழைக்கால உணவுகளில் உலர் பழங்களில் இன்று பேரீச்சை, உடலுக்கு நிறைந்த சத்துக்களும், இதிலுள்ள இனிப்பு  சுவை மனதிற்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் தரும், இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் நார்சத்து, கால்சியம், புரதசத்து....விட்டமின் A,  B1, B12, B6...... நலமும் பலமும் தரும் உணவுகளில்  இன்று உலர் பழங்கள் விதைகள் உணவுகள், குளிர்கால உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமான சூடுதரும் உணவுகளில் சிறந்த உணவு இவைகள், இதில் புரத சத்து, இரும்புசத்து, நார்சத்து அதிகம் உள்ளது, உடல் சோர்வு நீக்கி பலம் தருகிறது, இதிலுள்ள மதுர சுவை உடனடி புத்துணர்வு கொடுத்து, மனஅழுத்தம் நீக்கி மகிழ்ச்சியளிக்கும்.........

உயிர்வேலி...

 உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த உயிர்வேலியானது மண் அரிப்பை தடுத்தும்,பண்ணையாளரின் அனுமதி இல்லாமல் வாயிலை தவிர வேறு வழியில் வெளி ஆட்கள் பண்ணையின் உள்ளே நுழைய இயலா வண்ணம் அமைந்த ஒரு முள் வேலியாகவும், பல உயிர்கள் வாழும் இடமாகவும், பல உயிர்களுக்கு உணவு கிடைக்கும் ஒரு உணவு தொழிற்சாலையாகவும், மனிதர்களின் பழத்தேவையை பூர்த்தி செய்யும் ஒரு உணவுக்காடாகவும், கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனமாகவும், விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும், பசுந்தாள் உரத்திற்காகவும், பருத்தியின் மூலம் உடை தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்கு தேவைப்படும் மூலிகைகள் அடங்கிய மூலிகைக்காடாகவும் பயன்படுகிறது. வீட்டு தோட்டம் அமைப்பவர்களுக்கான உயிர்வேலி பாச்சான், கொட்டைச் செடி, கள்ளி,அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்க...