Posts

Showing posts from May, 2021

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

Image
 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி  தயாரிக்கும் முறை :- 🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿  பல்பொடி தயாரிக்க😁  தேவையான பொருட்கள் :- கிராம்பு பொடி                - 25 கிராம் கடுக்காய்  பொடி           - 40  கிராம் ஆலம் பட்டை பொடி.    - 25 அக்ரகாரம் பொடி          -10 கிராம் நாயுருவி வேர் பொடி  - 25 கிராம் கல் உப்பு பொடி              - 10 கிராம் இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.. 1 . கிராம்பு - பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும். 2 . கடுக்காய் -  அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் ...

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய் 🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋 ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய் கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின் ஆப்பில்170.ருபாய் தான் . 🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது. 👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது. 🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும். 🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம்.  🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரை...

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ்... 🌿🌳👏🙏👌🌼👆🧊💧 இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம். மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம். 1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம் பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை. மண் பானை போலதான் ! பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது.  தக்காளி + மிளகாய் 10 நாள். வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள் சாலட் காய் கறிகள் லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள் இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம் உருளை+மரவள்ளி 3 மாதம் கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை.  16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது. பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள். உடல் கெடாது. மனம் கெடாது. திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம்  கருமத்தம்பட்டி கோய...

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋               23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது.            மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது.        ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁 நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்... அருகம்புல் ஜுஸ் லெமன்புதினா ஜுஸ் முக்கனி சாலட் வல்லாரை கீர் எனர்ஜிலட்டு நுங்கு பாயாசம் வேர்க்கடலை சாலட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் பேபிகார்ன் சாலட் பூசண...

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்.... நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...    முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம்.                 பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.        அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.            ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர...

No Oil, No Boil... Healthy ayul... புற்றுநோயை குணமாக்கும்.... சிறுநீரக மண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய் மில்க் சேக்

 No Oil, No Boil...  Healthy ayul...🌿🙏  புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅 தேவையானபொருட்கள் நாட்டுகத்திரிக்காய் - 4 தக்காளி - 2 தேங்காய்ப்பால் - 50 மில்லி, வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப், ஏலக்காய் 4 செய்முறை  கத்திரிக்காய், தக்காளி ஆகியவைகளை துண்டுகளாக  வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம். ருதம்பராயோகா கோவை.

​ரோஜா குல்கந்து செய்முறை how to make gulkand at home

Image
 நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே  தயார் செய்வது எப்படி. .? 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 குல்கந்து செய்முறை 🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். 🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.  🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும்.  🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். 🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும். 🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க.... 🍁ருதம்பரா யோகா கோவை.

வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் Fenugreek water benefits

Image
 வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்.. ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள். வெந்தய டீ தயாரிப்பது எப்படி? ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள். இப்போது வெந்...

உணவே மருந்து. அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !

Image
 அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க ! கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம். கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய  நூலில் .... நெஞ்சின் கபம் போம் நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே* - அகத்தியர் நெஞ்சில் எந்த கபச் சளியும் நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும். அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம்  தப்பி விடுமா என்ன ! சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும். உணவே மருந்து.🌿🙏 சுண்டைகாய் வத்தலை பொடித்து கசாயம் செய்யலாம்.... சுண்டைக்காய் துவையல், குழம்பு, தொக்கு, சட்னி என ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி பலன்பெறு...

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்!!! வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!

Image
 கொல்லும் பிடரிதனை கோழையாமே.... சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்.... நுரையீரல் மட்டுமல்லாது உடலில் தேங்கும் கோழையை விரட்டும்.... வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!🌿🙏 🌿🍁முக்கூட்டு சூரணம் காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக மூலிகை கடைகள், காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்). இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளில் இருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள், சளிபடலங்கள் வெளித் தள்...

தேன் நெல்லிக்காய் Honey Gooseberry

Image
 தேன் நெல்லிக்காய் 🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈 சித்தஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் ருதம்பரா யோகாமையம் செல் : 8610823072 🌼🌸☘🌷🌿🌷☘🌸🌼 என்றும் இளமைதரும்.... சங்ககாலம் தொட்டு ஆரோக்கிய பொக்கிஷமாம் ஔவைக்கு அதியமான் அளித்த அமுதகனி.... தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?🤔 கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள். சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ ...

கழிவின் தேக்கம் நோய்கள் கழிவின் நீக்கம் ஆரோக்கியம் Clean your Intestine

Image
 கழிவின் தேக்கம் நோய்கள் கழிவின் நீக்கம் ஆரோக்கியம் குடல்சுத்தம்உடல்சுத்தம்🌿🙏 விளக்கெண்ணெய் 20 Ml..   ஒரு எலுமிச்சப்பழ சாறு கலந்து அதிகாலை 4 மணிக்கு நாக்கில் படாமல் மடக்கென்று குடித்து விடவும்   விடிவதற்குள்ளாக ஒரு 2 (அ) 3 லிட்டர் தண்ணீரை விடாமல் குடித்து கொண்டே வந்தால் வயிறு ஒரு 8 மணிக்குள் முழுவதுமாக  சுத்தம் செய்யப்படும். ஒவ்வொரு முறை கழிவை வெளியேற்றிய பின் ஒரு சொம்பு அளவு தண்ணீரை மிதமான சூட்டில் பருகவும்... ஆறு முறைக்கு பிறகு நல்ல சூடான ஒரு டம்ளர் நீரில் ஒரு முழு எலுமிச்சை சாறை கலந்து  அருந்த பேதி கட்டுப்படும். அன்றைய தினம் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதுநலம் (ரசம்சாதம்) விடுமுறை தினத்தில் செய்வது நல்லது லாக்டவுன்தானுங்களேஇது குடல்சுத்தம் செய்ய சரியான தருணம்🌿🙏 முன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங் களுக்கு ஒரு முறையோ அல்லது உங்களுக்கு தேவை என்று நினைக்கும் போதோ இதை தாராளமாக செய்து கொள்ளலாம். பலன்கள் பலநூறு உண்டு.... ருதம்பரா யோகா மையம் கோவை

பஞ்சசுத்தியில் ஒன்று | சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் Karisalai nei

Image
 பஞ்சசுத்தியில் ஒன்று  சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை) யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி. உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை. இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  கரிசலாங்கண்ணி (வெள்ளை) கீரையை வேரோடு ...

மஞ்சள்காமாலை குணமாக்கும், ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு, மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் கீழாநெல்லி சட்னி

Image
 👌ஆயுசு நூறு தரும் ✋ஆரோக்கியமான வாழ்வு தரும்  🔥அடுப்பில்லா சமையல்  மஞ்சள்காமாலை குணமாக்கும் ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு,  மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் 👌👍🌿🌿☘️  அற்புத ஆற்றல் நிறைந்த  கீழாநெல்லி சட்னி ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿🥙       கீழாநெல்லி கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலை,  முடக்குவாதம், மலச்சிக்கல், நாட்பட்ட நுரையீரல், சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானபொருட்கள் : 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 கீழாநெல்லி கீரை - 1 கப் நறுக்கிய கொத்தமல்லி தழை - 1கைபிடி இயற்கை தயிர் - ½ கப்  சின்னவெங்காயம் - 8  நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்   உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்  பொ. கடலை.     - 2 ஸ்பூன் தே.துறுவல்.       - 2 ஸ்பூன் மிளகுத்தூள் தேவைக்கு கொடம் புளி கரைசல் - 1 ஸ்பூன் செய்முறை:🌱🍃  கீழாநெல்லி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்...

No Oil, No Boil 🌿Healthy Ayul.... அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்

Image
 No Oil  |  No Boil  🌿Healthy Ayul.... அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்🍅🍉🌾☘️🍵🍃  இதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காய் இருக்க பயமேன்! 🌿🙏🥗👏 ஆம் இயற்கை உணவு முறையில் அனைத்து நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரஷரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரவில்லை என்றால் எங்கள் ஆலோசனைப்படி தினமும் 🙏🌿🥗 ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி பொடி செய்து உடன் வேர்க்கடலை தூள்,  எலுமிச்சை சாறு, மிளகு தூள் கலந்து காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் பத்து நாட்களில் அடைப்புகள் நீங்கி  இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்....வரும். வாழைக்காயின் ரகசியம்  இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச் சத்து மிக அத்தியாவசிய மாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாக வோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக் காயின் மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்...

உறங்கும் விதைகள் உயிர் பெறும் பயணம்!!! A Journey of sleeping seeds

உறங்கும் விதைகள் ( உறக்கத்தில் உள்ள ஒரு செடி ) உயிர் பெறும் பயணம்.....  வணக்கம்  * விளைகின்ற பயிரில் நன்கு விளைந்த பயிரில் இருந்து தேறிய விதைகளை மட்டும் எடுப்பது * அதை பானை அல்லது மண்குதிர்களில் பாதுகாத்தார்கள் * சேமிப்பின்போது பூச்சி தின்றுவிடாமல் இருக்க நொச்சி, புங்கம் போன்ற தாவரங்களின் இலைகளை விதைமீது பரப்பி வைத்தார்கள் * விதை சேமிப்பிற்கு முன்பு மூன்று அமாவாசை நாட்களில் வெயிலில் உலர்த்தி பின்பே சேமித்தார்கள் * விதைகளை உழவர்கள் கைமாற்றிக்கொண்டார்கள் * சாம்பலில் விதைகளை புரட்டி விதைநேர்த்தி செய்யப்பட்டது, எறும்பு, எலி, குருவி பொறுக்கிவிடாமல் இருப்பதற்கு * உரிய நேரம் காலம் பார்த்து விதையை நிலத்தில் இட்டு நீர்விடும் ( மழை) போது விதை உயிர்பெறுகிறது..... விதை என்பது வருங்கால சமுதாயத்தின் உயிர் வாழ்க்கையின் அடிப்படை... - Ajitha Veerapandian

பஞ்சபூத ஆற்றல் universal energy

 நம் உடல் பஞ்ச பூத சக்தியை அடக்கியுள்ள ஒரு அற்புத அமைப்பு, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு காற்று, ஒவ்வொரு செயல்பாடும் பஞ்சபூத சக்தியின் வெளிப்பாடு, இவை விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் கூட பொருந்தும், நம் உடலில் உள்ள 5 இராஜ உறுப்புகளின் ( கல்லீரல், இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ) அற்புத செயல்பாடுகள் பஞ்சபூத சக்திகளை கொண்டே செயல்படுகிறது, உடலில் பஞ்சபூத சக்திகளின் ஆற்றல் குறையும் போது உடல் வலிகளையும், சோர்வையும் உணர்கிறது, ஒவ்வொரு வலியின் தன்மையும் நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் சம்மந்தப்பட்டது, ஒவ்வொரு சக்தியும் கூடும்போதும் குறையும்போதும் நமக்கு வலிகளாக, நோய்களாக உணரமுடிகிறது, இவற்றை உடல் தானாக சரிசெய்துகொள்ளமுடியும், உதாரணமாக குழந்தைகளுக்கு காதுகுத்தும் ஓட்டை எப்படி மறைகிறது, மேலும் வயிற்றுள்ள கருவிற்கு யாரும் உள்ளே சென்று கையும் காலும் வைப்பதில்லை, அன்றைய சூழ்நிலையில் மருத்துவரிடம் அதிகம் சென்றதில்லை, ஆனா இன்று நிலைமை.... காலையில் வலி வந்தா மாலைக்குள் சரியாகிவிடவேண்டும், no time ....மாத்திரை கொண்டு தடுத்து நிறுத்தும் நோய்கள் மீண்டும் பல மடங்காக வரும்போது மனமும் உடலு...

தோல் சம்மந்தமான வியாதிகள் வராமல் இருக்க,

 Tips 1 மலச்சிக்கல் இல்லாமல் இருக்கணும். Tips 2 சோப் , ஷாம்பூ உபயோகம் தவிர்த்தால் நலம். வீட்டில் தயாரித்த பொடிகள் உபயோகிக்கலாம். ....  இது பொதுவான குறிப்புகள்....  தோல் வியாதியின் தன்மையை பொறுத்து ..தேவைக்கு ஏற்ப ...சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.... Tips 3  நமது உடலில் கழிவுகள் தேங்கும் போது அதை வெளியேற்ற நமது உடல் முயற்சி செய்யும். நுரையீரல் மற்றும் மலக்குடலில் கழிவுகள் தேங்கியிருந்தால் தோலின் வழியாக உடல் வெளியேற்றும். மலக்குடலை சுத்தகரித்தல், நீர் சிகிச்சை, பசித்து உண்ணுதல், அளவான சுவையோடு  (உப்பு, புளி, காரம்) சாப்பிடுதல், செயற்கை பூச்சுகளை தவிர்த்தல் இவற்றை பின்பற்றினாலே சரியாகிவிடும்.  நாட்பட்ட தொந்தரவாக இருந்தால் சரியாக கொஞ்சம் பொறுமையாக இருத்தல் வேண்டும்.  பசித்து உண்ணல், வியர்வை சுரப்பிகளுக்கு சூரிய ஒளியில் உடலுக்கு கொஞ்சம் வேலை கெnடுத்தல், மூச்சு பயிற்சி செய்தல் சீக்கிரம் நலம் பயக்கும்.

ஒரு குட்டி கதை... இந்த கதையின் ஒவ்வொரு வரியும் வெவ்வேரு நபர்களால் எழுதப்பட்டது...short story in which each line written by different people

 எழில் கொஞ்சும் பச்சை பசேல் மலைமீது  மெல்ல இயற்கை எழிலை ரசித்து உணர்ந்து, வியந்த கண்களோடு, சில்லென்று தொடும் தென்றலோடு,  காலணிகள் இல்லாமல் மண்வாசமும் உணர்ந்து.....ஏறுகிறேன் மலைமீது..... மலை மீது ஏறும்போது என் மனம் மற்றும் உடம்பும் காற்றில் பறந்துசென்றது, மலையின் வழி எங்கும் மூலிகை மரங்களின் காற்று  என்னை மேலும் தூய்மை ஆக்கியது. அப்போது தான் உண்மையான ஆக்ஸிஜன் உணர்ந்தேன். இயற்க்கையை ரசித்து என்னை நிலை மறந்து தேவதையாக மாறி மலைவாசிகள் வாழக்கமுறைகளை ரசித்தேன். மேகங்கள் அனைத்தும் கருமேகம் ஆக மாரி இளம் தூறல்  ஆரம்பித்து இருந்தது பஞ்ச பூதங்களின் சக்தியை உணர முடிந்தது பஞ்சபூதங்களின் சத்தி முழுமையான நான் அடைந்தேன். தூறலை கண்டதும் என் மனம் மயிலை போல ஆட நினைத்தது. அப்போது மயில் ஆட குயில்பாட ஏக ஆனந்தம் இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது. இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது. நாம் பெற்ற இன்பம் நம் தோழர்களை தேடியது. மின்னல் ஒளியில் நான் கண்ட காச்சி ஆஹா மழையில் நனைந்து அந்த வெளிச்சத்தில் வெதுவெதுப்பான இடம் செல் எண்ணியது. மலையின் மீது வானவில் நான் தொட்டுவிடும் தொலைவில் இருப்ப...

இன்றைய விளையாட்டு கோடிட்ட இடத்தை நிரப்புதல்....... Fill in the blanks game !!! Are you ready???

நீர் தான் ___தண்ணீர் இல்லாமல் ____இருக்காது, உடலின் அனைத்து உயிரனுக்களுக்கும் நீர் உணவு, மற்றும் ___ஆகும், இது ஒரு நொடியில் அனைத்து உறுப்புகளுக்கும் ___அளிக்கிறது, நீர் உடல் மற்றும் ___நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது, தண்ணீர் பற்றாக்குறை உடலில் உள்ள பெரும்பாலான ____ஏற்படுத்துகிறது, மலையிலிருந்து வரும்  ___ நீர் என்பது மனிதனின் நுகர்வுக்கு இயற்கையின் நோக்கம்கொண்ட நீர் ஆதாரமாகும், தாகம் என்ற உணர்வு முதலில் ___உணரப்படுகிறது, உலர்ந்த உதடுகள் மற்றும் தொண்டைதீவிர நீரிழப்பை குறிக்கிறது, தண்ணீரை குடிக்க சிறந்தவழி கையின் உள்ளங்கையில் இருந்துதான், நீர் விழுங்குவதற்கு முன் உதடுகளின் நாவின் ____தொடவேண்டும், தண்ணீரின் வெப்பநிலையும், சுவையும் விழுங்கப்படுவதற்கு முன்பு உடலின் உமிழ்நீரை நடுநிலையாக்க வேண்டும், தண்ணீரை சிப்பால் உட்கொள்ளவேண்டும், கல்ப் செய்வதன்மூலம் அல்ல, தண்ணீரை நுகரும் முன் _____ நன்றி சொல்லவேண்டும், சுவை வாயில் தானே நடுநிலையான பின்னரே அனைத்து சாறுகளையும் விழுங்க வேண்டும்....... விடைகள் இங்கே 👇 சரியான விடைகளை கோடிட்ட இடத்தில் நிரப்பவேண்டும் 💐 * மருந்து * வாழ்க்கை *அமுதம் * ஆற்றல் ...

உணவே மருந்து சில நோய்களும் அதன் தீர்வுகளும் Natural remedy for some diseases

நல்ல நெஞ்சு சளிக்கு  இரவு தூங்கும் முன் ஒரு நபருக்கு ஒரு வெற்றிலை கால் ஸ்பூன் சிரகம் கால் ஸ்பூன் மிளகு . செய்முறை: வெற்றிலையை பிச்சி போட்டு சிரகம் மிளகு நுனுக்கி 500ml தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் 150 ml குறைய வைத்து பனகல் கண்டு சேர்த்து சாப்பிடனும் 12 நாள். குறிப்பு: பால் சாப்பிடும் பலக்கம் உள்ளவர்பால் சாப்பிட்ட பின் வெற்றிலை கசாயம் சாப்பிடவும். உடல் சோர்வு (வெயில் காலத்தில்)...  ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சை பழம் புளிந்து உப்பு மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்து குடித்தால் உடல் தெளிர்ச்சி அடையும்... Dehydrated bodyக்கு இது சிறந்த உடனடி தீர்வு... அதன் பிறகு உணவு எடுத்து கொள்ளலாம்... பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் இருக்கவும் வந்தபுற்று நோய் குணமாக மகிழம் பூ சிறந்த மருந்து சித்தர் கோயில் சித்தர்கள் கல்வெட்டில் எழுதியது அல்சர்     அல்சர் உள்ளவர்கள் முதலில் வயிற்றில் ஒரு வெள்ளை துணியை போட்டு அதன்மேல்களிமண் பரப்பி12 நாள் செய்ய அல்சர் குறையும். மனதை தெளிவாக வைத்துக்க வேண்டும். இரவில் மூன்று நான்கு முறை யூரியன் வெளியேரினால் தூக்கம் தடைபடும் அதற்க்கு அத்தி இலைகசாயம...

To increase blood ரத்தம் அதிகரிக்க

 ரத்தம் அதிகரிக்க     கருப்பு உலர்திராச்சை 9 நாள் சாப்பிடவும்.  சாப்பிடும் முறை:- முதல்நாள் இரவு 3 திராச்சை உறவைத்து. மறுநாள் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் சாப்பிட பின் ஒரு திராச்சை கால் டம்ளர் தண்ணீர் விதம் மூன்று நேரம் சாப்பிடவும். இவ்வாறு 2வது நாள் ஒரு வேளைக்கு 2விதம் இப்படி ஒன்பது வரை எண்ணிக்கை அதிகரித்து சாப்பிட்டு பாருங்கள் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்...

அல்சர் தீர்வு Ulcer

அல்சர் தீர்வு  உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அல்சர் நோயை போக்க  மண தக்காளி கீரையுடன் (1/2) பாதி அளவு நாட்டு தக்காளி🍅 விதை பகுதி நீக்கி விட்டு பனங்கற்கண்டு சேர்த்து 3 நாள் காலை உணவுக்கு முன் ஜூஸ் போட்டு குடிக்கவும்....

குதிகால் வலிக்கு செங்கல் மருத்துவம்

 குதிகால் வலிக்கு செங்கல் ஒன்றை அடுப்பில்  வைத்து நன்கு ஒரு பத்து நிமிடம் சூடுபடுத்தி அந்த கல்லை பழைய துணியின் விரிப்பில் வைத்து எருக்கன் இலையை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து குதிகாலை அதன் மேல் வைத்து ஒத்தடம்  கொடுக்கவும். மூட்டு வலிக்கு சூடான இலையை மூட்டின் மேல்  போட்டு  ஒத்தடம் கொடுக்கலாம். சட்டியில் கல் உப்பை போட்டு வறுத்து வெள்ளை துணியில் மூட்டை கட்டி  ஒத்தடம் கொடுக்கலாம். அகலமான தட்டு அல்லது  பாத்திரத்தில் சுடு தண்ணீர்  ஊற்றி குதிகாலை அதில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்

ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் இதை செய்யுங்கள் உடனே குணம் ஆகும் Remedy for Irregular periods

Image
இன்றைய சூழலில் பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை அப்படி நாள் தவறி வரும் மாதவிடாயினால் பெண்கள் பல தொல்லைகளை நடைமுறை வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர் ... இதில் இருந்து விடுபட பெண்கள் இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம் ... ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் பதினா (Mint) இலையை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து ,ஒரு ஸ்பூன் எடுத்து தேணில் கலந்து  சாப்பிட்டால் மூன்று நாட்களுக்குள் மாதவிடாய் நடக்கும்,  but if you go to doctors they will give tablets for months, but this single time simple food medicine will cure your problem ,,no side effects too... செய்து பார்த்து உங்கள் அனுபவங்களை கமெண்டில் தெரிவிக்கவும்