Posts

Showing posts from June, 2021

இரைப்பை சுத்தம் | 30 நாள் ஆரோக்கிய பயணம் | இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 இரைப்பை சுத்தம் 8 டம்ளர் நீர் ( 1 1/2 லிட்டர் )... மிதமான குடிக்கும் அளவு சூடு ( warm water ), அதில் 1 டம்ளர் நீர் எடுத்து 2 1/2 ஸ்பூன் இந்துப்பு நன்றாக கலந்து, மொத்த நீரில் கலக்கவும்,  அந்த நீரை சுவைத்துபார்த்தால் நம் கண்ணீரில் உள்ள உப்பின் சுவை இருக்கவேண்டும், அதிக உப்பாக இருந்தால் கூடுதல் நீர் சேர்க்கலாம், ஒவ்வொரு டம்ளராக குடிக்கவும், குடித்து முடித்து பெருவிரலை வைத்து லேசா வாயில் மேலண்ணத்தில் தொட்டால் வாந்தியாக அனைத்து கழிவுகளும் வரும், இரண்டு டம்ளர் குடித்ததும் வாந்தி வந்தாலும் எடுக்கலாம், இதை செய்யும் நேரம் 5 முதல் 7 மணிக்குள் இருப்பது நல்லது, இந்த நேரம் உடல் கழிவுகள் நீக்கும் நேரமாகும்,  எந்த வித பக்கவிளைவும் இல்லாத கழிவு நீக்க இது, இதை தொடர்ந்து 10 நாள் செய்துவர 5 கிலோ எடை குறைக்கலாம் ( எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ).... இந்த கழிவுநீக்க முறையினால் தீரும் நோய்கள் முடக்குவாதம் மூட்டுவலி நெஞ்செறிச்சல் கட்டிகள் நீங்கும் குடல் அலர்ஜி அல்சர் இந்த கழிவு நீக்க முறையை கர்ப்பமாக உள்ள பெண்கள் செய்யவேண்டாம், ஏன்னா அவங்களுக்கு இயற்கையாகவே இது நடக்கும்...முதல் மூன்று மாதம்......

இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம் Perfect Health in Natural Way | Organic health tips

 அனைவருக்கும் வணக்கம் 🙏 நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,  ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா  மாற்றம் கொடுக்கும்,   கழிவு நீக்கம்.... இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்.... உடல் கழிவுகள் கண் கழிவுகள் மூக்கு கழிவு வாய் கழிவு சிறுநீர் மலம் வியர்வை காதுகழிவு மூச்சுகாற்று ( வெளிமூச்சு ) சளி பித்தநீர் தும்மல் தலைகழிவு ( கெட்டநீர் ) இரைப்பை கழிவு நீர்தாரா.... ( பெண்கள் ) இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்...... ஏன் கழிவுநீக்கம்? நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,..... ...

30 நாள் ஆரோக்கிய பயணம்... perfect health in natural way

அனைவருக்கும் வணக்கம் 🙏  30 நாள் ஆரோக்கிய பயணம்... ஜூலை 1 முதல் ஆரம்பமாகிறது. 30 நாள் பயிற்சி. முதல் 5 நாள் கழிவு நீக்கம் அடுத்த 2 நாள் இயற்கை வாழ்வியல்...... அடுத்த 3 நாள் தற்சார்பு வாழ்வியல் பொருட்கள் தயாரிப்பு..... அடுத்த 10 நாள் இயற்கை உணவுகள்.... இறுதி 10 நாள் பாரம்பரிய உணவுகள் பற்றிய பயிற்சியும், செய்முறை விளக்கங்களும்..... Introduction Day 1 இரைப்பை சுத்தம்   இப்படிக்கு    நிர்வாகம் சார்பாக அஜிதா வீரபாண்டியன்

உள்ளூர் டிராகன் புரூட் Native/Village Dragon fruit | தினம் ஒரு மூலிகை இன்று பாதாளமூலி மறுபெயர் சப்பாத்திகள்ளி

Image
 தினம் ஒரு மூலிகை இன்று பாதாளமூலி மறுபெயர் சப்பாத்திகள்ளி  வட்ட வடிவ சதைப் பற்றான கொத்துக் கொத்தான மொழிகளை உடைய தண்டுகளையும் மஞ்சள் நிற மலர்களையும் புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற உண்ணக் கூடிய கனிகளையும் உடய கள்ளியினம்.  தண்டு வேர் பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை நஞ்சு நீக்குதல் வெப்பு அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது சதையை சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 துண்டுகள் வரை சாப்பிட எட்டி வாளம் அலரி சேங்கொட்டை நாவி ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு போகும் வெப்ப வயிற்று வலி அடிக்கடி மலம் கழித்தல் கிராணி சத்தத்துடன் போகும் உஷ்ணபேதி முதலியன தீரும் வேரை பொடி செய்து 10 கிராம் கொடுத்துவர பூரான் கடி வண்டுகடி நஞ்சுகள் முறியும் தேள்கடிக்கு கொடுத்து காயை வாட்டி கடி வாயில் வைக்க குடைச்சல் தீரும்  பழச்சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடை கால வெப்பநோய் தீரும் முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம் ஒத்தடம் கொடுக்கலாம். இந்த வகை "காக்டஸ்" சிறிய அளவில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் வளர்க்க முடியுங்க. உள்ளூர் டிராகன் புரூட்  ...

மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி Morinda sp.

Image
 மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி  இன்று 😍😍 ஹைபீரிடு எனும் மாய உலகில் நாட்டு ரகங்களை சாப்பிடுவதே சவாலாக உள்ளது  அதனால்தான் இதுபோன்று என் தேடல்  காயை பிஞ்சாக பறித்து சிரிது சிரிதாக நறுக்கி தண்ணீரில் போடனும் இல்லைனா கருத்திடும்  பத்து பிஞ்சிகளுக்கு மேல் போட வேண்டாம் காய்முற்றியதாக இருந்தால் துவர்ப்பும் கசப்பும் அதிகமாகிடும் அப்புரம்  விதைகள் நாம் சாப்பிடும் போது  தொந்தரவாக இருக்கும்   நல்லென்னை விட்டு வதக்கிய பிறகு  தேங்காய் சட்னி செய்வது போல் செய்து கொள்ளலாம் புளி சேத்திக்க தேவையில்லை  சரி இதன் மருத்துவ பயன் பார்போம்ங்க... உடல் வெப்பத்தை தனிக்கும் கல்லீரல் மண்ணீரல் ஆகியவைகளை சுத்தபடுத்தும்  சக்கரை அளவை கட்டுபடுத்தும் இரும்பு சக்தியை அதிகரிக்கும்ங்க வயிற்று புன் ஆற்றிடும்ங்க மூட்டு வலி போக்கி புற்று நோய் வராமல் தடுக்கும்  உடலில் நோய் எதிர்பு திறனை அதிகபடுத்தும்  கொஞ்சம் துவர்பு கசப்பு சுவையுடன் தான் இருந்தது சாப்பிடலாம்  உணவை ருசிபார்து பகிற்ந்தது   K. M. A. Dhanapal மரங்களை நேசிப்பவன்  இனைந்தே பயண...

இன்றைய காலைஉணவு தூயமல்லி அரிசி சாதம்

Image
 இன்றைய காலைஉணவு  தூயமல்லி அரிசி சாதம்    துத்தி இலை பொரியல் பருப்பு சாம்பார்  துத்தி இலையின் அசத்தல் மருத்துவபயன்  அழற்சியைப் போக்கும்  மலக்கட்டு ஆசனவாய் எரிச்சல் மூலம்  ஆகியவற்றை குணமாக்கும்ங்க  நோய் நீக்கி உடலைத் தேற்றும்  உடல் சூடு  குணமாக்கும்  சிறுநீரை பெருக்கும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்  இருமலைக் குறைக்கும் ஆண்மையைப் பெருக்கும் குளிர்ச்சி உண்டாக்குமங்க  இது எல்லா இடங்களிலும் சாதாரமாகவே கிடைக்கும் கீரைதான்  நல்லென்னையில்   வதக்கி செய்யனும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும்  சுவை என்பது சற்று குறைவாக இருந்தாலும் உடலுக்கு ஏற்ற உணவுங்க  துத்தி இலையை சிரிதாக நருக்கி நம்ம வீட்டில் முருங்கை கீரை செய்வது போல் செய்தால் போதும்  இனைந்தே பயணிப்போம் மரங்களுடன்  பாரதி பசுமை சேவை

இயற்கை வழியிலான உணவுகள் வழியிலான மலமிளக்கிகள் யாவை? What are the laxatives through natural foods?

 பப்பாளி, துத்தி, கீரை, வாழை, இயற்கை மலமிளக்கிகள்... கடுக்காய் பொடி 1  தேக்கரண்டி  1 டம்பளர் நீரில் கரைத்து படுப்பதற்கு முன் குடிக்கவும்                 வெந்தயம்,  கருஞ்சீரகம், ஓமம் இவற்றை பொடியாக்கி1 தேக்கரண்டி 1 டம்பளர் நீரில் கரைத்து குடிக்கவும். இவற்றை குடித்தபிறகு எதுவும் சாப்பிட கூடாது.  மற்றோரு செலவில்லாத முறை காலை எழுந்தவுடன் 2 பெரிய டம்பளர் நீரை குடிக்கவும் மலசிக்கல் என்பதே வராது   மாதுளை பழம் தோல் இரவில் ஊறவைத்து அதிகாலை அந்த நீரை வடிகட்டி சுமார் 400 ml   குடித்தால் நீண்ட நாள் கழிவுகள் வெளியேறும்.  நெல்லிக்காய் சாறு அதிகாலை குடித்தால் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றினால் மலமிளக்கி யாக செயல்படும். மாவு உணவு (அரிசி & கோதுமை உட்பட தானியம்) தவிர்த்து நார்ச்சத்து உணவுகள் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். பசு மாடு போல் சாப்பிட வேண்டும். உணவு வாடை பார்த்து அதை அதை அசைபோட்டு மனதை ஒருநிலை படுத்தி உண்ணவேண்டும். ...

மரங்கள் மண்ணின் வரங்கள்save trees

Image
 🌿🌳இனிய வணக்கம்ங்க.. இன்றைய தினம் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி முதல்வர் மற்றும்  கண்காணிப்பாளர், தலைமையில்  மருத்துவ மனை உள்பகுதியில்  மூலிகை வனம்🌵🌿🌳 அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு நிகழ்வு துவக்கப்பட்டது ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலிஈஸ்வரன் நிகழ்வுகுறித்து கூறுகையில் பசுமையை அதிகரிக்கும் விதமாக மருத்துவ குணம் மிகுந்த மரங்களை மருத்துவமனை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணி துவக்கி இருப்பது மகிழ்வை தருவதாகவும் நிகழ்வினை ருதம்பரா பவுண்டேசன் சார்பில் நிர்வாகிகள் கேபிள் மணி, டிரீம்டாட்ஸ் சுகுமார், மரம்பொன்னுசாமி,வள்ளிக்கும்மி  குழுவினர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள் மரங்கள் மண்ணின் வரங்கள்🌿🙏 🌱🪴🌳🌲🌴🎋🌴🌲🌳🪴🌱  

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது 21/06/2021

 🌿🙏🌸சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வை டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார் மருத்துவ மனை கண்காணிப் பாளர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவை ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் 🌿🌼யோகா குருஜி ஶ்ரீ பதஞ்சலிஈஸ்வரன் கலந்து கொண்டு யோகபயிற்சி, ஆற்றல் மிகுந்த சுவாச பயிற்சிகள், முத்திரை களின் நன்மைகள் குறித்தும் இன்றைய வாழ்வியல் சூழலில் நம்மை பாதுகாக்கும் ஆரோக்கியமான இயற்கை  உணவுமுறைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆயுஷ் யோகா மருத்துவர் நந்தினி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தார் ஒருங்கிணைத்தார்கள் ( நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அடுப்பில்லா சமையல் முறையில் செய்யப்பட்ட 🌿லெமன்புதினா ஜுஸ் 🥗வெஜ் சாலட் 🍵கவுனி அரிசி நெய்ப்புட்டு 👍எனர்ஜிட்ரைபுரூட்ஸ் லட்டு ஆகிய சத்துமிகும்  உணவுவகைகளை செய்முறையுடன் ருதம்பரா பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.) நன்றி🌿🌼🙏🌸🌳🪴🌷

எறும்பு தொல்லையா இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பாருங்கள் Get-rid off ants

 எறும்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் தூள் கரைசல் ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு தொடர்ந்து தெளித்து வரவும். மூன்று தெளிப்பிற்கு ஒரு முறை வெற்றிலைச் சுண்ணாம்பு பட்டாணி அளவு கலந்து தெளிக்கவும். எறும்பு நீங்கிய நிலையில் 3/4 நாட்கள் இடைவெளியில் எல்லாச் செடிகளுக்கும் தெளித்து வரவும். இந்த கரைசல் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும். வரும் முன் காப்பது சிறந்தது.

நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. Peanut tincture is a yield multiplier - an overview.

Image
ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும். பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம். பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும். நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும். திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம். 4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம். பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்...

இயற்கை உணவு Traditional and Natural Food

Image
 இயற்கை உணவு.        8 மணிநேரம் ஊறவைத்த பாசிப்பயறு, நிலக்கடலை, சுண்டல் உடன் தேன். முளை கட்டிய பயறு சாலட்

நாளை ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம் live with traditional food for one full day இயற்கை வழி வீட்டுத் தோட்டம் - ஒரு தற்சார்பு வாழ்வியல் பயணம்

 அனைவருக்கும் வணக்கம்.... நாளை  ஒரு நாள் எனது வாழ்வியல் பயணம்.....நீங்களும் இணையலாம்...விரும்பினால்..... * அதிகாலை அலாரம் இல்லாமல் எழுதல் * இரண்டு டம்ளர் மண்பானை நீர் அருந்துதல் * தோப்புகரணம் 10 * மூலிகை பல்பொடியில் பல்விலக்குதல் * கற்றாழை குளியல் * கண்களுக்கு ஒரு சூரிய குளியல் * ஆசணங்கள், மூச்சுபயிற்சி, எதுவுமே முடியலயா....10 முறை ஓம் சொல்லலாம் * நாமே தயாரித்த மூலிகை தேநீர்  * புஸ்தக வாசிப்பு * காலை உணவு அத்திப்பழ ஜூஸ் * மதியம் 50% சாதம், 50% காய் ( மென்று உமிழ்நீரோடு உண்ணுதல் ) * பாரம்பரிய அரிசி பாயாசம் ( அரிசி, வெல்லம், தேங்காய்பால் ) * சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவு.... * 16 மணிநேர விரதம் ஆரம்பம்.... * மனதிற்கு பிடித்த பாடல் கேட்பது, அல்லது பாரம்பரிய நடனம் ( நடனம், பாடல் நிகழ்காலத்தில் வாழவைக்கும் )...... நான் ரெடி...நீங்க 👆🤝

இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3 தேதி: 19/06/2021 Topic: மண் வளம் அறிவோம் (Soil Science)

Image
 இயற்கை வழி வீட்டு தோட்டம் பயிற்சி - 3☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 தேதி:  19/06/2021   நேரம்:3:30 PM to 5:00 PM Topic: மண் வளம் அறிவோம் (Soil Science) நடத்துபவர்: திரு. பலராமன் மானேரி இயற்கைவழி வீட்டுதோட்டம் /Seed Island விதை தீவு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் Mrs. Ajitha Veerapandian Mrs. Akila Kunalan Mrs. Priya Rajnarayanan  ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம் குறிப்பு: பயிற்சி சரியாக 3.30 PM ஆரம்பித்து  5 PM முடிந்து விடும். SeedsIsland Team is inviting you to a scheduled meeting. https://youtu.be/XSWHLCCtbpI Or Join Zoom Meeting https://us02web.zoom.us/j/9470331037?pwd=aDR0bi9NeFN1ME9sZ1VkQ2dqL0JHdz09 Meeting ID: 947 033 1037 Passcode: nF5j3H Or https://www.facebook.com/seedisland.seedisland/

சர்வ சுகந்தி மரம் Pimenta dioica | மருத்துவ பயன்கள் நிறைந்த சர்வ சுகந்தி மரம் | Allspice: Health Benefits | What are the health benefits of pimento?

Image
சர்வ சுகந்தி மரம்  Pimenta dioica      மேற்கிந்திய தீவுகள், (ஜமைக்கா)    உன் தாயகம்!.     உணவில் நறுமணம் கூட்டும் உன்னத இலை மரம் நீ! 59.அடி வரை வளரும் அழகு மரம் நீ!   குளிர் பிரதேசங்கள் உன் கூடாரம்! சோம்பு, ஏலக்காய்,கிராம்பு, பட்டை இவைகளின் நறுமணங்களை நீ தருவதால் ‘ஆல் ஸ்பைஸ்’ மரமானாய்!.      அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வகை நாடுகளில் சமையலில் பயன்படும் இலை மரம் நீ!  ஆல் மசாலா, பலமசாலா,ஜமைக்காய் பெப்பர்  எனப்பல்வகைப்பெயர்களில் விளங்கும் நல்வகை மரம் நீ!ஜீரணசக்தி,      வயிற்றுவலி,பல்வலி, மலச்சிக்கல்,தோல் வியாதி,வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை,முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம்,எலும்பு முறிவு,ரத்த சர்க்கரை அளவு குறைப்பு,நீரிழிவு, இதய நலம்,வளர்சிதை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!    பிரியாணி சாப்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நறுமண நல்மரமே!      தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படும் ஊடுபயிரே! ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கும் வேளாண் மரமே!   விதைகள் &ப...

மாடித்தோட்டத்தில் வைக்கும் பைகளின் அளவு என்னென்ன செடிகள் வைக்கலாம்? Growbag sizes and selected plants for that growbags

12இஞ்ச் × 12இஞ்ச்  (ஒரு அடிக்கு ஒரு அடி ) இந்த அளவுள்ள பையில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், தக்காளி, மணத்தக்காளி கீரை, புளிச்சைக் கீரை, இஞ்சி, மா இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற செடிகளும் கற்பூரவள்ளி எனும் ஓமவல்லி, துளசி, பிரண்டை போன்றவற்றையும் வைக்கலாம்.  12 இஞ்ச் × 15இஞ்ச்  ஒரு அடிக்கு ஒன்னேகால் அடி தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கொத்தவரை போன்றவை ஒரு செடி மட்டும் வைக்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை போன்ற மூலிகைகள் வைக்கலாம்.    15 இஞ்ச் ×15 இஞ்ச்  ஒன்னேகால் அடிக்கு ஒன்னேகால் அடி  இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, குடைமிளகாய் போன்ற   அதிகப்படியான காய்கள் காய்க்கும் செடிகளை வைக்கலாம். இரண்டு செடிகள் வரை வைக்கலாம். சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,  சர்க்கரைவள்ளி கிழங்கு  போன்ற கிழங்கு வகைகளையும் இதில் வைக்கலாம். தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைகள் இதில் தாராளமாக வளரும்.  15 இஞ்ச் × 9 இஞ்ச்  கீரை பை கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, புதினா, வெந்தயம், கொத்தமல்லி, வெங்க...

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள் giving feedback without hurting

 நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார். விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார். பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது " என்று கேட்டார். அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே " கண்ணமுது  கோவில் , கறியமுது  விண்ணகர் , அன்னமுது  வில்லிப் புத்தூர்  ஆனதே , எண்ணும் சாற்றமுது  மல்லை , குழம்புமது  குருகூர் , பருப்பதனில்  திருமலையே  , பார் " என்றார். உடனே நமது நண்பர்   "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று மிக மகிழ்ச்சி அடைந்தார். இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர் இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார். இதோ அந்த வைணவ நண்பர் கூறிய பொருள். கண்ணமுது என்றால் பாயசம். ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம். அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து   இருந்ததாம...

மழை பற்றிய சகுனங்கள் When rain will come? What happens before rain?

 மழை பற்றிய சகுனங்கள்... ---------------------------------------- கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும். 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை 2. தட்டான் தாழப் பறந்தால் மழை 3. அந்தி ஈசல் அடை மழை 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை. 5. தவளை கத்தினால் மழை 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை 7. கொக்கு மேடேறினால் மழை 8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை 9. கழுதை காதை உயர்த்தினால் மழை 10. ஈசல் பறந்தால் மழை 11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை 12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை  13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை. 14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை 15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை  16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை 17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை 18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை 19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை. 20. மயில்கள் நடனமாடினால் மழை 21. பசுக்கள் சூர...

இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்... உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே..... நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.       அதையும் பெரிது பண்ணாதே...... உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ..... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....          ஒவ்வொரு மனிதனும்          தனித்தனி ஜென்மங்கள்.          தனித்தனி பிறவிகள்          தனித்தனி ஆன்மாக்கள்..... அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்..... அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்க...

இன்பத் தமிழ்...! குண்டக்க என்றால் என்ன? மண்டக்க என்றால் என்ன? Power of Tamil Language

1. அந்தி, சந்தி:  அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.  சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.  2. அக்குவேர், ஆணிவேர் : அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.  ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். 3. அரை குறை: அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது. குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.  4. அக்கம், பக்கம்: அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும். பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும். 5. அலுப்பு சலிப்பு : அலுப்பு: உடலில் உண்டாகும் வலி. சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.  6. ஆட்டம் பாட்டம் : ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது. பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது. 7. இசகு பிசகு:   இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல். பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். 8. இடக்கு முடக்கு:  இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல். முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல். 9. ஏட்டிக்குப் போட்டி : ஏட்டி: விரும்ப...

மண் குளியல் soil bath feedback

 அனைவருக்கும் வணக்கம் 🙏 மண் குளியல் இனிதே செய்து முடித்தேன், அதற்கு நம் குழு நண்பர்களும் ஒரு காரணம், நீங்க செய்யும்போது நானும் செய்யனும்னு ஒரு ஊக்கம் கொடுக்கறது நீங்க தான்,.... குளியல் ஆரம்பிக்கும் போது முதல் ஒரு கைமண் எடுத்து தடவும்போது ஒரு ஜில்லுனு ஒரு உணர்வு அருமை, கல்யாணத்தில் வளைகாப்பில் கண்ணத்தில் சந்தனம் தடவும்போது வரும் உணர்வு போல் ஒரு மகிழ்ச்சி..... உடல் முழுவதும் ஒரு புத்துணர்வு பெற்றது, குளிச்சி முடிச்சதும் பசி எடுத்தது....🙏👍 மண்குளியல் செய்தவங்க மட்டும் பதிவு போடுங்க, செய்யாதவங்க செய்யும்போது போடுங்க, ஏன் சொல்றேனா....இன்னைக்கு நான் செய்யவில்லை என்பது வேண்டாத ( negative ) பதிவு, இரண்டாவது சரி நாம இன்னைக்கு செய்யல இவங்களும் செய்யலபோல னு சிலர் நினைக்க வாய்புண்டு, இதை செய்தவங்க பதிவு அவசியம் போடுங்க, நேரமில்லைனு சொல்லாம இருக்காதீங்க, நன்றி....இயற்கை வாழ்வியலை உணர்ந்து செயல்படுத்தி ஆரோக்கியவாழ்வை வாழ்வோம் வாழவைப்போம்....😍🎊 Ajitha Veerapandian

சூரியஒளி குளியல் sun bath

 சூரியஒளி குளியல் காலண்டரில் சூரிய உதயம் நேரம் பார்துக்கோங்க, அதில் இருந்து ஒருமணிநேரத்திற்குள் இந்த குளியல் செய்யலாம், கண்களை நன்றாக திறந்து சூரியனை பார்த்து அதன் சக்தியை உள்வாங்கலாம், 5 நிமிடம் போதும்.....அதில் வரும் ஒளி உங்கள் மீது படுவதுபோல் கற்பனை செய்து நில்லுங்க, சூரியனை பார்த்து நிற்கும்போது காலனிகள் போடாமல் நிற்கவேண்டும்.... இதற்கு எந்த கடைக்கும்போய் எதுவும் வாங்கவேண்டியதில்லை, செலவில்லை, நம்மை தேடிவரும் சக்தியை நாம் ஏற்றுக்கொண்டு நலமாய் வாழ்வோம்..... காலையில் நான் தூங்கிட்டேன் செய்யமுடியல னா, மாலை சூரியன் மறைய ஒரு மணிநேரத்திற்கு முன் செய்யலாம் நல்லது......ஆனால் காலையில் மிக நல்லது .......விருப்பம் செயல் உங்களுடையது..... பயன்கள் *புது நம்பிக்கை பிறக்கும் * அதிகாலை எழுவது வழக்கமாகும் * புதுவிதமான சக்தி நம் உடலில் இருப்பதுபோல் உணரமுடியும் * தோல்வியாதிகள் தீரும் * கண்களுக்கு புதுவித ஒளியால் நீண்டநாள் கண் ஆரோக்கியம்பெறும்

உணவு எப்படி சாப்பிடவேண்டும் How to eat perfect

 அனைவருக்கும் வணக்கம் 🙏 உணவு எப்படி சாப்பிடவேண்டும் * சம்மணம் போட்டு சாப்பிடனும் * பற்களால் அரைத்து உண்ணவும் * சாப்பிடும்போது தண்ணி குடிக்ககூடாது * கவனம் சாப்பாட்டில் இருக்கவேண்டும் * இன்று இந்த உணவு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி, உணவை ஆசிர்வதித்து உண்ணவும் * உணவு உண்ணும் முன் பின் அரைமணிநேரம் இடைவெளியில் நீர் அருந்தலாம் * சாப்பிடும்போது உதடு பிரியகூடாது, இப்படி சாப்பிடும்போது வாயில் எச்சில் சுரந்து உணவோடு கலந்து செல்லும், ஜீரணம் எளிதில் ஆகும் * கையில் எடுக்கும் உணவு விரலில் முதல் கோட்டிற்கு மேல் போககூடாது * அம்மாக்கள் பிள்ளைகளோடு சாப்பிட கூடாது * குளிக்கும் நேரம்... உணவிற்கு முன் பின் 45 நிமிடம் இடைவெளி இருக்கவேண்டும்...

முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல்

Image
இன்றைய காலை உணவு  முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல் இன்று பிரமாதமாக இருந்ததுங்க   ஹைபீரிரடு எனும் மாய உலகில் ஆரோக்கியமாக வாழ்வதே சவாலாக உள்ளது சந்தைக்கு வரும்  ஒரு சில கீரைகள் தவிர எல்லா வகை கீரைகளும் ஹைபீரிடு ஆகதான் உள்ளது  அதில் கிடைக்கும் மருத்துவபயண்களும் கேள்விகுரியாகவே உள்ளது  அதனால் தான் நாம் மரந்துபோன கீரை அம்மான் பச்சரிசி இலையை நான்  உணவுக்காக பயண்டுத்த துவங்கினேன்  நல்ல ருசி நல்ல மனம் சாப்பிட எந்த தொந்தரவும் இல்லைங்க  சரி எப்படி செய்வது என்று கேட்பீங்க நானே சொல்கிறேன் சிம்பில்  நம்ம வீட்டில் பொதினா கொத்தமல்லி செய்கிற பக்குவம்தானுங்க வேரொன்றும் இல்லை  காசு இல்லை கலை செடியை பிடிங்கினால் போதும் மருந்தாக பயண்பெறும்ங்க அடுத்து இதன் மருத்துவ பயண் பாருங்க இன்னும் நெகிழ்வா இருக்கும் இந்த கீரை வகை ஆஸ்துமா மூச்சுப் பிரச்சினை இரத்தத்தை சுத்தப்படுத்துதல்  உடல் வலிமை நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது உடல் சூடு மற்றும் மலச்சிக்கல் வாய் மற்றும் குடல் அல்சர் பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் ...

கண் நலம் for better eye sight

கண் நம் உடலில் முக்கியமான ஒரு உறுப்பு, அழிவு என்பது இல்லாத ஒரு உறுப்பு எது என்றால் அது கண், இறப்பிற்குபின் அழியும் இந்த உடலில், கண் மட்டும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பின்பும் வாழும் திறன் பெற்றுள்ளது, இந்த அழகிய அற்புதமான படைப்பை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது, அந்த பொக்கிஷத்தை  காப்பது நம் கடமை, அவசியமும் கூட.....கண்கள் பேசும் ( அனைவரும் அறிந்தததே)......  * கண், கல்லீரல், பித்தப்பை, ஜீரணம் இவற்றில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றை பாதிக்கும்,  * கோபம் 👆 இந்த நான்கையும் பாதிக்கும் * கழிவு தேங்கினால் கண் நோய் ஏற்படும் * கழிவு நீக்கம் செய்ய நேத்ர சுத்தி...அதாவது கண்குவளை வைத்து சுத்தம் செய்யலாம்,  * அதிகாலை பல் விலக்காமல் நம் உமிழ்நீரை கண்ணில் விடலாம் * கண் சிமிட்டுவது மிக அவசியம், நாம் கண்களை சிமிட்டாமல் இருக்கும் நேரம் கைபேசிபார்ப்பது, தொலைகாட்சிபார்ப்பது * சூரியயோகம்...அதாவது சூரிய உதயமாகி அடுத்த ஒரு மணிநேரம், சூரிய அஸ்தமனமாக முன் ஒரு மணிநேரம் பார்ப்பது கண் நலம் கொடுக்கும், 5 நிமிடம் பார்த்தால் போதுமானது * கண் பட்டி....கண்ணில் புற்றுமண் அடைத்த துணி அல்லது தண்ணீரில...

தேன் நெல்லி Honey Amla / Then nellikai / Honey gooseberry

 தேன் நெல்லி என்பது பெரிய நெல்லி பயன்படுத்தி செய்வார்கள். கிளாஸ் பாட்டிலில் ஒரு அடுக்கு இயற்கையாக தயாரித்த பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சக்கரை இட்டு கழுவி காய வைத்த நெல்லியை சிறிய ஈர் குச்சியை வைத்து துளைகள் போட்டு ஒரு அடுக்கு வைக்கவும். வில்லைகளாக்கியும் போடலாம். பின்பு அதன் மேல் வெல்லம். அடுக்குகள் மெல்லியதாக போடவேண்டும். இல்வாறு அடுக்கு அடுக்காக போட்ட பின்பு சூரியபுடம் போடவும். வெல்லத்திற்கு பதில் சுத்தமான தேனை முங்கும் அளவு ஊற்றி சூரிய புடம் போட்டு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்காக நெல்லிக்காய் லேகியம் செய்யலாம். பெரு நெல்லியை நன்றாக கழுவி துடைத்து ஆறிய பின் துறுவி வெல்லப்பாகுடன் கிளறி சுருண்டு வரும் போது  ஏலக்காய் கிராம்பு பட்டையை வெறும் வாணலியில்  வறுத்து பொடி செய்து சேர்க்கலாம்.  சுக்குப்பொடி சிறிது சேர்த்தால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு  எல்லாம் கலந்த சுவை கிடைக்கும்.  இதை மிட்டாய் மாதிரி சப்பி  சாப்பிடும் போது உமிழ் நீர் அதிகம் சுரந்து உடலுக்கு நன்மை பயக்கும்.   நன்றி.

வீட்டில் விளைவித்த காய்கறி (home made organic) நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை

 வீட்டில் விளைவித்த காய்கறிகளை 2010லிருந்து பயன்படுத்தி வந்ததால் இரத்த அழுத்தத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன். 16 மாத்திரையில் ஆரம்பித்து 3 மாத்திரை ஆனது. கடந்த நான்கு வருடங்களாக மாத்திரை எதுவும் எடுத்துக் கொள்ளவதில்லை. காரணம் மாத்திரைகள் எடுத்தும் தீராத சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டில் விளைந்த கீரைகள் தீர்த்து வைத்தது. அனுதினமும் கீரைகள் மாற்றி மாற்றி கலாவாங் கீரை சூப் ஒரு கப் வீட்டிற்கு பணிக்கு வரும் அம்மையார் முதல் அனைவரும் பருகி வருகிறோம். பயன்படுத்தி ஒரு வாரத்தில் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன் என்று கூறினார் பணி மகள். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.

NEET Coching - NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்?

 NEET மற்றும் JEE பயிற்சி மையங்களில் சேரப்போகிறவா நீங்கள்? லட்சங்களை செலுத்தும்  முன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். 1.அனைத்து பயிற்சி மையங்களும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் Physics Book என்னவெனில் Concepts of Physics by H.C.Verma இதன் விலை 600 மட்டுமே. 2.  BIOLOGY பாடத்திற்கு NCERT மற்றும் SCERT உங்களது புத்தகத்தை படித்தால் மட்டுமே  போதுமானது. 3. MATHS பாடப்பிரிவிற்கு உங்களது பாடப்புத்தகங்ளோடு  Maths by R.D.Sharma வைத்துக் கொள்ளுங்கள். இதன் விலை அதிகபட்சமாக 1500 ரூபாய். 4.   CHEMISTRY பாடப்பகுதிகளை உங்களது  NCERT மற்றும் SCERT புத்தகங்களை கொண்டே படிக்கலாம். 5. 40 ஆண்டு வினா வங்கி புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு நீங்கள் படித்ததில் உள்ள வினாக்களை விடையளித்து பாருங்கள். இதன் விலை அதிகபட்சம் 700 ரூபாய் மட்டுமே. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவெனில் பல பயிற்சி மையங்கள் தங்களது பெயரில் புத்தகங்களை ARIHANT PUBLICATIONS போன்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களே தயாரித்தது போன்ற முன்பக்க அட்டையை அச்சடித்து மாணவர்களுக்கு வழங்கி ஏமாற்ற...

road safety message

Image
 ஜாக்கிரதை #####₹₹₹₹₹₹## நான்கு வழிசாலைகளில் இரவு நேரங்களில் வலதுபுறமாக செல்லவேண்டாமென பலமுறை கூறினாலும் பெரும்பாலானவா்கள் கேட்பதில்லை. இதை பாா்த்தாலே உங்களுக்கு புாியும்.   அதாவது, தொடா்சாலையில், இடைவெளி விட்டு மீண்டும் சாலை தொடங்கும்போது படத்தில் உள்ளதுபோல திடீரென சென்டா் மீடியன் அகலமாக வரும்போது இரவுநேரத்தில் எதிரே வரும் வாகனவெளிச்சத்தில் முன்னால் இருக்கும் சாலையின்தன்மை நமக்கு தொியாது.  80,90 ,என வேகத்தில் செல்லும்போது ஒருசெகன்டில் எல்லா ஜோலியும் முடிந்துவிடும்..   பகலாக இருந்தால்கூட நம் கண்களுக்கு தொியும்..தப்பித்துக் கொள்ளலாம்.   ஆகவே, இனிமேலாவது ஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குங்கள்..   நன்றி.

மதராஸ் பாஷை சுவை தலபுராணம் - மெட்ராஸ் பாஷை Madras Tamil

மெட்ராஸ் பாஷை அல்லது மெட்ராஸ் மொழியை தமிழகமெங்கும் எடுத்துச் சென்றது தமிழ்த் திரைப்படங்கள்தான்.  குறிப்பாக,  என்.எஸ்.கே, சந்திரபாபு, சோ, நாகேஷ், மனோரமா, சுருளிராஜன், லூஸ் மோகன், ஜனகராஜ் எனக் காமெடி நடிகர்களே இதைக் கச்சிதமாகச் செய்தனர். 1968 ம் வருடம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம்’  படத்தில்  மனோரமாவின் வா வாத்யாரே வூட்டாண்ட… நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...’ பாடல் மெட்ராஸ் பாஷையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. தவிர, பல படங்களில் நடிகர்கள் சந்திரபாபுவும், சோவும் இன்னாமே, எப்டிகீற… குந்துமே… என்பது போன்ற வசனங்களைப் பேசுவதைப் பார்த்திருப்போம். எப்படி நெல்லைக்கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும், கோவைக்கும் தனித்துவமான பேச்சு மொழி இருக்கிறதோ, அதுபோலவே மெட்ராஸுக்கும் தனித்த பேச்சு மொழி இருக்கிறது.  போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், முஸ்லிம்கள், பணி நிமித்தமாக வந்த மற்ற மொழியினர் எனப் பலதரப்பட்டவர்கள் இங்கே வந்ததும், வாழ்ந்ததுமே இதற்குக் காரணம். குறிப்பாக, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் நிறைந்திரு...

Why Chennai is called SuperKing

Chennai is the 2nd city in the world to become a municipal corporation next to London, in the year 1688. Chennai is the only city in India that will have 2 international ports, Chennai port, Ennore port,  Chennai has the longest beach in India, 12kms urban beach, 2nd longest in the world. Chennai is the only city that houses a national park within city limits. The Guindy national park. Chennai is the only city that has three rivers flowing through it, Adyar, Covum river, Kosasthalai river. Chennai's Old Mahabalipuram Road is the single largest IT corridor in India. Chennai is the single largest automobile manufacturer in Asia. Fondly called the Detroit of Asia. Chennai houses the largest bus terminus in Asia at Koyambedu. Chennai is the birthplace of 'Chicken 65' @ Hotel Buhari. Chennai has the largest library in Asia, Arignar Anna centenary library. Chennai's Vandalur Zoo is the largest zoo in India. Chennai's Guindy engineering college the oldest in India, 1794. T...

ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!! there is no weapon which will make peace in the world

Image
 என்ன  😭😭😭😭😭 கொடுமை  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது 1945 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியாகும். அமெரிக்காவினால் ஜப்பானின் நாகசாகி நகரத்துக்கு அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி 7 நாட்களின் பின்னரே இந்தப் புகைப்படம் ஒரு அமெரிக்கப் படை வீரரினால் எடுக்கப்படுகிறது. அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட  Joe 0'Donnell என்ற அமெரிக்க ராணுவ வீரரினால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு நிற்கிறான். இப்படி சிறுவர்கள் தம்பி,தங்கைகளை தோளில் சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை பெரிதாக சிந்தித்துக் கொண்டு  இருந்தான். அவனது காலில் செருப்பு கூட இருக்கவில்லை. அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையை திரும்பிப் பார்த்தான், அப்போதுதான் அவனது த...

மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!

 தென்கச்சி கோ சாமிநாதன் நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். . ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. . “ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’ . “ஆமாங்க.’ . “நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’ . “சொல்லுங்க டாக்டர்.’ . “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’ . “எங்கே டாக்டர்?’ . “பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’ . “பெரிய விபத்தா டாக்டர்?’ . “ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டி இருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’ . “சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம். . “வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்து இருக்கறவங்களுக்கு   எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா தான்  அவங்களையெல்லாம் காப்பாத்திடலாம்.’ . “சரி.’ . “ஆனா போதுமான ரத்தம்...

தாளிசாதி சூரணம் | தாளிசபத்திரி (Taxus baccata)

 தாளிசாதி சூரணம்  தாளிசபத்திரி (Taxus baccata) என்பது இந்த மருந்தின் முக்கிய உட்பொருள். அது காட்டு லவங்க மரம். தாளிசபத்திரி அதிகம் இருப்பதால் இந்த மாத்திரைக்கு தாளிசாதி சூரணம் என்று பெயர். இந்த மாத்திரையில் இருக்கும் முக்கிய உட்பொருள்கள்: சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கப்பட்டை, ஏலரிசி, மூங்கில் உப்பு, இன்னும் பல. அளவோடு உட்கொள்ளலாம் இந்தச் சித்த மருந்து பொடியாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. சாதாரணச் சளியாக இருந்தால் ஒன்று, தொண்டையில் சளி கட்டியிருந்தால் சப்பிச் சாப்பிடுவதற்கு வடகம் என மாறுபட்ட வகைகள் உண்டு. இந்த மருந்து செரிமானத்துக்கும் துணைபுரியும். எதிர்க்களித்தல், வாயுப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் இந்த மருந்து நிவாரணமளிக்கும். தலைவலிக்கு அடுத்தபடியாகப் பலரையும் அடிக்கடிப் பிடித்தாட்டும் பிரச்சினையாக சளி, இருமலே இருக்கிறது. இந்தச் சளிக்கு தாளிசாதி சூரணம் சிறந்த நிவாரணம் தரும். வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என்ற வீதத்தில் மூன்று நாட்கள்வரை உட்கொள்ளலாம். 'இம்காப்ஸ்' எனப்படும் இந்திய மருந்து உற்பத்திக் கூட்டமைப்பின் தயாரிப்பு இந்த மருந்து. சித்த-ஆயுர்வேத மருந்தகங்கள...